Posts

பாவேந்தர் - மறைக்கடிக்கப்பட்ட உண்மையான புரட்சிக் கவிஞர்

Image
சில விஷயங்களை நாம் பேசியாக வேண்டும். இங்கேயே பல ஆயிரம் ஆண்டுகளாகவே ஒரு பிம்பம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அந்தப் பிம்பம் சிலருக்கானதாகவும், ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்தவர்களைத் தொடர்ந்து பெருமைப்படுத்தும் விதத்தில் இருந்து வருகிறது.  அப்படி இந்த பிம்பத்தால் மிகவும் அமுக்கப்பட்டு வெளியே தெரியாத போன, பொதுவெளியில் பேசப்படாது போன ஒருவர் தான் புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன். பாரதியாரைப் பற்றி ஒரு வரி கூட தெரியாத அவரது கவிதைகளை படித்திராத பலர் அவரது பிறந்த இறந்த நாளுக்கு பதிவுகள் போடுகின்றனர். அவரைப் பற்றி கேட்டால் அந்த பதிவு போடுபவர்களுக்கு ஒன்றுமே தெரிய மாட்டேன்கிறது! ஆனால் விடுதலை பெண்கள் கல்வி என்ற பேச்சை எடுத்தவுடனே பாரதி என்று ஆரம்பித்து விடுகிறார்கள். இது ஒரு நகை முரண். ஆங்கிலேயருக்கு பயந்து புதுச்சேரியில் சென்று ஒளிந்து கொண்டு பல ஆண்டுகளாக பாட்டையே எழுதாமல் திரைமறைவு வாழ்க்கை வாழ்ந்து ஊருக்கு யோக்கியம் சொல்லிக்கொண்டிருந்த பாரதிக்கு கிடைக்கின்ற புகழ் பாரதிதாசனுக்கு கிடைக்கவில்லை! சொல்லப்போனால் பாரதிதாசனுக்கு நிகராக கூட பாரதியை வைக்க முடியாது. பாரதிதாசன் எந்த புராண இதிகா...

பேராசிரியர் தொ.ப வுடன் ஒரு நேர்காணல்

Image
பேராசிரியர் தொ. பரமசிவன் (பிறப்பு: 1950) தமிழகத்தைச் சேர்ந்த ஒரு பண்பாட்டு ஆய்வாளர். பேராசிரியர் தொ. பரமசிவன் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டையில் வசித்து வருகிறார். தமிழில் இயங்கிவரும் முக்கியமான பண்பாட்டு ஆய்வாளர்களில் ஒருவர். பண்பாடு, சமயங்கள் தொடர்பான இவரது ஆய்வுகள் மார்க்சிய பெரியாரிய அடிப்படையைக் கொண்டது. அடித்தள மக்களின் அழிந்து வரும் பண்பாடுகளை காக்கவேண்டியதன் அவசியத்தைக் கூர்மையாக முன்வைப்பவர். திராவிடக்கருத்தியலோடு கூடிய புதிய ஆராய்ச்சி முறையியலைக் கண்டுபிடித்த பெருமைக்குரியவர். கலாச்சாரம் என்பது மறு உற்பத்தி சார்ந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் பேசுகின்ற தத்துவார்த்த மொழியை உடைத்தெறிந்துவிட்டு எளிமையான மொழியின் வழி நுண் அரசியலைப் புரியவைத்தவர். எச்சங்களாகவும், மிச்சங்களாகவும் சிதறிக் கிடக்கும் தமிழ்ப் பண்பாட்டின் வேர்களை தன் கட்டுரைகள் வாயிலாக எடுத்துரைத்து வருபவர். மேலிருந்து எழுதப்பட்ட வரலாற்றிற்கு மாற்றாக கீழிருந்து வரலாறு எழுதுவதற்கான பயிற்சியை இவரது கட்டுரைகள் தருகின்றன. தமிழ்ப் பண்பாட்டு ஆய்வுக்களத்தில், பேராசிரியர் தொ. பரமசிவன் தவிர்க்க முடியாத பெயர். வெகுமக்...

புயல்கள் ஏன் எதிர் கடிகாரத் திசையில் சுழல்கின்றன ?

Image
    அண்மையில் நிவர் புயல் தமிழகத்தைப் பலமாக தாக்கி, இப்போது வலு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக ஆந்திர மாநிலத்தில் நிலைகொண்டுள்ளது. நிவர் புயல் தமிழகத்தை தாக்கியது உண்மைதான் என்றாலும் வட மாவட்டங்கள் மற்றும் ஒருசில டெல்டா மாவட்டங்களை தவிர மற்ற பகுதிகளில் சொட்டு மழை கூட பதிவாகவில்லை. இது ஏன்? ஆனால் எதிர்மறையாக ஆந்திரப்பிரதேசம் நல்ல மழை பொழிவை பெற்றிருக்கிறது.  புயலின் சுழற்சியை பொறுத்தே மழை பொழிவு அமையும். பொதுவாக வட அரைக்கோளத்தில் உருவாகும் புயல்கள் எதிர் கடிகார திசையிலும் தென் அரைக்கோளத்தில் உருவாகும் புயல்கள் கடிகார திசையிலும் சுழல்கின்றன. அப்படி வட அரைக்கோளத்தில் எதிர் கடிகார திசையில் புயல்கள் சுழல்வதால் தமிழகத்தை இப்படிப்பட்ட புயல்கள் தாக்கும் பொழுது செயற்கைக்கோள் படங்களின் மூலமாக அவற்றை நோக்கினால் தெளிவாக ஒன்று புலப்படும். வங்கக் கடலில் சென்னையில் இருந்து அல்லது புதுச்சேரியில் இருந்து 300 கிலோ மீட்டர் கிழக்கில் ஒரு புயல் இருப்பதாக கணக்கில் கொள்வோம். அந்தப் புயல் எதிர் கடிகார திசையில் சுற்றும் பொழுது வங்கக்கடலின் ஈரம் மிகுந்த காற்றை இழுத்து சென்னை உள்ளிட்ட வடக்கு தமி...

முத்தையா முரளிதரன் படம்: விஜய் சேதுபதி நடிக்க எதிர்ப்பு! இலங்கை தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள்?

Image
நான் பொதுவாக எந்த ஊரு செய்தி வந்தாலும் அந்தத் துறை சார்ந்த நண்பர்களிடம் அதைப் பற்றி விவாதிப்பது வழக்கம். இலங்கையைச் சேர்ந்த தமிழ் நண்பர் ஒருவர். தொடர்பு கொண்டு பேசினேன். முத்தையா முரளிதரன் வாழ்க்கை படமான '800' ஐ முன்வைத்து எழுந்திருக்கும் சர்ச்சைகளை இலங்கையில் எப்படி பார்க்கிறார்கள் என்பதை தெரிந்து கொண்டேன்.  அரசியல் விளம்பரம் இனவாதம் எல்லாவற்றையும் தாண்டி பொதுவாக முரளிதரன் விஷயத்தை பேச வேண்டியது கடமையாகிறது. முரளிதரன் இலங்கையின் மலையகத்தில் பிறந்த இந்திய வம்சாவளி தமிழர். சென்னை பெண்ணை திருமணம் முடித்தவர். இவர் மேல் மனக்கசப்பு எங்கே தொடங்குகிறது என்றால் ஒரு பேட்டியில் இலங்கை ஒரு பௌத்த நாடு தன்னை ஒரு இலங்கையன் என்றும் அடையாளப்படுத்துகிறார். எனினும் தனக்கு நன்றாக தமிழ் பேசத் தெரியும் என்றும் அதே பெட்டியில் தெரிவிக்கிறார். என்னதான் அரசியலமைப்பு ரீதியாக இலங்கை ஒரு பௌத்த நாடாக இருந்தாலும் இலங்கையில் தமிழ் சிங்களம் என இரு மொழி பேசும் நான்கு இனங்கள் இருக்கின்றனர். அப்படி இருக்கும்போது இவரே இலங்கையை ஒரு பௌத்த நாடு என அடையாளப்படுத்துவது மனக்கசப்பை உண்டாக்கியதாக தெரிவிக்கிறார...

அறிவோம்: மனநல பிரச்சினைகள்

-காவ்யா பெரியசாமி மன நல நோய்களுக்கு இது தான் சிறந்த சிகிச்சை என்று பொதுவாக எதுவும் கூற முடியாது! ஒவ்வொரு நோயாளியின் நடத்தையை வைத்தே அதற்கு ஏற்ற வகையில் சிகிச்சை அளிப்பார்கள்! மனச்சோர்வு என்பது ஒரு மேலோட்டமான கூற்று. அதற்கு கீழ் பல விதமான மன நோய்கள் உள்ளன, like bipolar disorder, Parkinson's disease, schizophrenia, Border line personality disorder, anxiety disorder etc., சிலர் யாரிடமும் பேசாமல் அமைதியாகவே இருப்பார்கள், சிலர் தன்னிலை அறியாது எதேனும் பேசிக்கொண்டே இருப்பார்கள், சிலர் மிகவும் முரட்டுத்தனமாக நடந்துக் கொள்வார்கள், சிலர தன்னைச் சுற்றியுள்ள அனைவரையும் சந்தேகித்துக் கொண்டே இருப்பார்கள், அனைவரும் தங்களுக்கு தீங்கு விளைவிக்கப் போகிறார்கள் என்று வலுவாக நம்புவார்கள், அது அவர்களது குடும்பத்தினராக இருந்தாலும் சரி! அதில் சிலருக்கு தற்கொலை எண்ணங்களும் வந்து போகும்! இவ்வாறு இருக்க நாம் இது தான் தீர்வு என்று எதையும் கூற முடியாது! மாறாக இந்த எண்ணங்களின்/ நடத்தையின் வீரியத்தை குறைக்க முடியும்! நான் கூறியது போலவே இது நம் மூளையில் திரவ மாற்றம் காரணமாக ஏற்படும் ஓர் நோய்! அதற்கு நாம் சிறந...

Voice of a Kashmiri

Image
- Khan Tauseef from Srinagar, Presently staying in TamilNadu Before 1947 jammu and kashmir was a princely state and had no connection with india and pakistan which both were under british rule and occupancy, till 1947 we had our own prime minister called sadri riyasat ,now comming on post independence of india and pakistan . On October 27, 1947, Maharaja Hari Singh, the then ruler of Jammu and Kashmir (J&K), signed the dubious instrument of accession with the Indian government allowing Indian forces to land in Srinagar in order to oust Pakistan-backed armed groups who were in a position to oust the Dogra rule from there. But the agreement was once the situation would be inder control indian forces had to leave kashmir but after that india army didn't leave and which results in to the first Indo-Pak war which resulted in the creation of the ceasefire line and occupation of a part of Jammu, Kashmir, and Ladakh by India. Only Gilgit, Baltistan and a small part of J&K came u...

அம்பானிகளின் நாடு

நடுவண் அரசு அண்மையில் 3 விவசாய சட்டங்களை இயற்றி இருக்கிறது அல்லது திருத்தி இருக்கிறது. இதற்கு எதிராக நடுவண் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த சிரோமணி அகாலிதளம் கட்சியின் பெண் அமைச்சர் பதவி விலகி இருக்கிறார். பஞ்சாப் அரியானா மாநிலங்களில் பெரும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்திலும் முணுமுணுப்புகள் கேட்கின்றன. சரி எதற்காக நடுவணரசு இவ்வளவு அவசரமாக இந்த மூன்று சட்டங்களை கொண்டு வருகிறது என்கிற கேள்வி எழுகிறது? அண்மையில் நடந்த நிகழ்வுகளையும், இந்த சட்டத்தையும் நாம் பொருத்திப் பார்ப்பது காலத்தின் கட்டாயமாகிறது. நடுவண் அரசு ஏறக்குறைய அம்பானி மற்றும் அதானி போன்ற பெருநிறுவனங்களின் கைக்கூலியாகவே மாறிவிட்டிருக்கிறது என்று சொல்லத் தோன்றுகிறது. அவர்கள் கட்சிக்கு நிதி மட்டும் அளிக்கிறார்களா அல்லது அவர்களது கட்சியையே அல்லது அரசாங்கத்தை அவர்கள்தான் நடத்துகிறார்களா என்கிற கேள்விக்கு இன்றைய தேதியில் பதில் யாராலும் சொல்ல இயலும்.  கடந்த இரு வாரங்களுக்கு முன்பு அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் குழுமம் ஃபியூச்சர் ரீடைல் என்டர்பிரைசஸ் நிறுவனத்தை வாங்கி இருக்கிறது. இந்நிறுவனம் நாடுமுழுவதும், ஆயிரத்திற்க...

புரட்டாசி மாதம் அசைவ விலக்கு உண்மை என்ன?

புரட்டாசி மாதம் அசைவ விலக்கு என பலரும் பதிவு போட்டு வருகின்றனர். உண்மை என்ன? தமிழகம் முழுவதும் இதே போல புரட்டாசி மாசம் யாருமே அசைவம் சாப்பிடுவது இல்லையா என்று பார்த்தோமானால் இது உண்மை அல்ல. இந்த பழக்கம் யாரிடம் இருக்கிறது என்றால் பெரும்பாலான வட - மேற்கு தமிழக மக்களிடமும், பெருமாளை வணங்கும் வைணவர்களிடம் தான் இருக்கிறது. தென் தமிழகத்தை எடுத்துக்கொண்டால் மதுரைக்கு தெற்கே புரட்டாசி மாதம் அசைவம் சாப்பிடுவது இல்லை என்பதெல்லாம் கட்டுக்கதை. அதுவும் கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்த பேச்சுக்கே இடமில்லை. தமிழகத்தைப் பொறுத்தவரை தெற்கே செல்லச் செல்ல தமிழினத்தின் கலப்பு இல்லாத உண்மையான பண்பாட்டு கூறுகள் வெளிப்படும். இந்த விஷயத்திலும் அதுதான். தமிழகத்தின் தென்கோடி பகுதிகளில் புரட்டாசி மாதத்தை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை கணக்கில்.  சரி புரட்டாசி மாதம் அசைவம் சாப்பிட்டால் உடல் நலத்திற்கு கேடாமே? உண்மையா? ஏன் புரட்டாசி மாதம் சாப்பிட கூடாத கூடாது என்றால் அதற்கு உடனே இந்த மாதம், வெயில் முடிந்து மழை தொடங்கக் கூடிய காலம். ஆகவே பூமியில் இருந்து வெப்பம் அதிக அளவில் வெளிப்படும். எனவே அசைவம் சாப்பிடுவது உடல்...

இந்தியை ஏன் பள்ளியில் ஒரு பாடமாக கற்கத் தேவையில்லை?

இந்தியை ஏன் பள்ளியில் ஒரு பாடமாக கற்கத் தேவையில்லை? நாம் பள்ளிக்கூடங்களில் இந்தியை ஒரு பாடமாக படித்து வருகிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதனால் ஏற்படும் நன்மைகள் என்ன? சங்கிகள் சொல்வது போலயே ஒருவேளை நீங்கள் வட இந்தியா வர நேரிட்டால் பள்ளிக்கூடத்தில் படித்த இந்தியை எவ்வளவு தூரம் பயன்படுத்துகிறீர்கள் என்று ஒரு மதிப்பீடு செய்தால் அதிகபட்சம் 10-20 சதவிகிதமே வரும்.  ஏனெனில் நீங்கள் இந்தியில் எழுத போவதோ வாசிக்கப் போவதோ இல்லை. மொழியின் நான்கு கூறுகளில் இரண்டு முதலிலேயே அவுட். அடுத்து வரக்கூடிய பேசுவது மற்றும் கேட்பது ஆகிய இரண்டும் தான் நீங்கள் பயன்படுத்த வேண்டி வரும். இன்றைய தேதியில் வட இந்தியாவிலும், கிராம பகுதிகளை தவிர நகரங்களில் ஆங்கில கலப்பு இந்தியையே பயன்படுத்துகிறார்கள்.  சான்றாக பேருந்து எத்தனை மணிக்கு வரும்? என்பதை Bus ka timing kya hai? என்றால் பதில் சொல்லிவிடுவார்கள். கூட்டி கழித்து பார்த்தால் ஒரு ஐநூறு ஆயிரம் வார்த்தைகள் தெரிந்திருந்தால் போதும் நீங்கள் இந்தியில் பேசி வட இந்தியா முழுவதும் சுற்றி வந்துவிடலாம். தமிழகத்திலிருந்து தொழில் நிமித்தமாக வேலை நிமித்தமாக செல்லக் கூட...

கடலடி ஒளி இழைத்தடங்கள்: சில உண்மைகள்

Image
கடலடி ஒளி இழைத்தடங்கள்: சில உண்மைகள் - சு.முத்துக்குமார் 07.09.2020      சென்னைக்கும் அந்தமானுக்கும் இடையில் சில வாரங்களுக்கு முன்பு கடலடி கேபிள் வசதி தொடங்கப்பட்டுள்ளதாக செய்தி வந்தது. நாம் எல்லோரும் படித்திருப்போம். சரி உலகமெங்கும் எப்படி இதைச் செய்கிறார்கள் இதன் பயன் என்ன? கடலடி என்றால் எவ்வளவு ஆழத்தில் எப்படி பதிக்கிறார்கள் என்பதை யோசித்திருக்கோமா? இல்லை என்றால் கவலை இல்லை. இப்போது யோசிக்கலாம். வாருங்கள்.     ஒருகாலத்தில் கடலடியில் தகவல்களை பரிமாற்ற உலோக கம்பி வடங்கள் பயன்படுத்தப்பட்டிருந்தாலும் இன்றைய தேதியில் முழுவதும் கண்ணாடி ஒளி இழைகள் பயன்படுத்தப்படுகின்றன. முதலில் இதைப் பார்ப்போம். கண்ணாடி ஒளி இழைகள்:       பள்ளிக்கூடத்தில் படித்திருப்போம், கண்ணாடி ஒளி இழைகள் தகவல்களை ஒரு முனையிலிருந்து மறுமுனைக்கு ஒளி அலைகளின் மூலமாக எடுத்துச் செல்வதற்கு உதவுகின்றன. கண்ணாடி ஒளி இழைகள், ஒளி அலைகளை தகவல் பரிமாற்றத்திற்கு பயன்படுத்துகின்ற காரணத்தினால் தான் இதனது பயன்பாடு அளப்பரியதாக இருக்கிறது. இந்த பேரண்டத்திலேயே வேகம் கூடியது எதுவென நமக்...

ஐரோப்பிய வாகையர் ஆட்ட இறுதிப் போட்டி - சாதனைகள் பல கண்டு‌ பட்டம் பெற்ற பேர்ன் முனிச்!

Image
லிஸ்பன் நகரில் நேற்று நடந்த 2019-20 ஐரோப்பிய வாகையர் ஆட்ட (சாம்பியன்ஸ் லீக்) இறுதி போட்டியில் ஜெர்மனியின் பேர்ன் முனிச் அணி, பிரான்சின் பாரிஸ் செயின்ட் ஜெர்மெய்ன் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி கொண்டது. ஆட்ட சுவாரசியங்கள்: பேர்ன் முனிச் அணிக்கான கோலை கிங்ஸ்லே கோமன் அடித்து, அந்த அணிக்கு வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியை ஏழு ஆண்டுகளுக்குப் பின் பெற்றுத் தந்திருக்கிறார். பேர்ன் முனிச் அணி ஆறாவது முறையாக வாகையர் பட்டம் சூடுகிறது. 2013க்கு பின் ஏழு ஆண்டுகள் காத்திருந்து இந்த சாதனையைப் படைத்திருக்கிறது. பேர்ன் முனிச் அணி தான்‌ இன்று பெற்ற ஆறாவது பட்டத்துடன் வாகையர் ஆட்ட வரலாற்றில் அதிக முறை பட்டம் பெற்ற மூன்றாவது அணியாக உருவெடுத்துள்ளது. [முதல் - ரியல் மாட்ரிட் (13முறை), இரண்டு - மிலன் (7முறை)] பேர்ன் முனிச் அணி தான் பெற்ற ஒரு கோல் மூலமாக மற்றொரு சாதனையை நிகழ்த்தி இருக்கிறது. ஐரோப்பிய வாகையர் ஆட்ட வரலாற்றில் 500 கோல்கள் அடித்த மூன்றாவது அணியாக இடம்பெற்று விட்டது. பேர்ன் முனிச் அணிக்கு வெற்றி தேடித் தந்த கிங்ஸ்லே கோமன் எதிரணியின் சொந்த களமான பாரிசைச் சேர்ந்தவர் மற்றும் பிஎஸ்ஜி ...

கே.பி.என் தெரியும் நமக்கெல்லாம் வி.பி.என். தெரியுமா?

Image
கொரோனா ஊரடங்கு காலத்திற்குப் பின் விபிஎன் என்பது மிகவும் புகழ் பெற்றுவிட்டது. சரி விபிஎன் என்றால் என்ன? விபிஎன் (மெய்நிகர் தனி வலையமைப்பு) என்பது பொது மற்றும் தனிநபர் நெட்வொர்க் க்கு பாதுகாப்பு மற்றும் ரகசிய காப்பு அளிக்கும் ஒரு இணைப்பு முறையாகும். சான்றாகச் சொல்லவேண்டுமானால் wi-fi ஹாட்ஸ் பாட்டுகள் தனக்கே உரிய விபிஎன் என்னும் இணைப்பை பயன்படுத்தி தகவல்களை பத்திரப்படுத்தி கொள்ளும். அதாவது தங்களிடம் கடவுச்சொல் கேட்ட பின்பு தானே இணைப்பு தரும், அதுதான் அந்த ரகசிய நெட்வொர்க். அண்மைக் காலங்களில் விபிஎன் மிகவும் பிரபலமடைந்து வருகிறது. காரணம் பலரும் வீட்டிலிருந்தே வேலை செய்கிறார்கள், மேலும் அரசுக்கு தெரியாமல் அரசால் தடை செய்யப்பட்ட இணையதளங்களை பார்க்க முயற்சிக்கிறார்கள். எப்படி விபிஎன் நமக்கு ரகசிய காப்பு அளிக்கிறது என்றால் நம்முடைய வலைப்பின்னலின் ஐபி முகவரி பதிலாக வேறு ஒரு ஐபி முகவரி மூலமாக இணைய இணைப்பை அளிக்கிறது. விபிஎன் சந்தாதாரர்கள் தங்கள் விருப்பப்படும் ஐபி முகவரியை நிறுவனம் அளித்திருக்கும் பட்டியலிலிருந்து தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். எடுத்துக்காட்டாக, நீங்கள் சென்னையிலிருந்து இணையதளத்தில...

Does TamilNadu really need a Second Capital?

Image
No need for a second capital in Tamil Nadu! Why? Tamil Nadu is one of the leading states in India.  The capital of Tamil Nadu - Chennai, like almost all other states, is located in a corner.  Is that why we need a second capital?  If so, I would say no.  Having dealt with the past without transportation and telecommunications, we need to think about why today.  Corona is changing our lives even more and taking us all the way into the digital world.  Today the demand for a second capital is meaningless.  How many times you had to go to the capital?  Once, twice?  That's it.  If we say for the court, there is already a bench of the High Court in Madurai!  What is the problem then?  If you show your hand to Andhra Pradesh, the situation is different there.  The capital is going to be the third.  They are going to set up a capital for the judiciary, a capital for the administration, a capital where the legislature will be...

தமிழகத்திற்கு ஏன் இரண்டாம் தலைநகரம் தேவையில்லை?

Image
தமிழகத்தில் இரண்டாம் தலைநகரம் ஏன் தேவையில்லை? தமிழகம் - இந்தியாவின் முன்னணி மாநிலங்களுள் ஒன்று. தமிழகத்தின் தலைநகரும் ஏறக்குறைய மற்ற அனைத்து மாநிலங்களைப் போல ஒரு மூலையிலேயே அமைந்துவிட்டது. அதனாலேயே நமக்கு இரண்டாம் தலைநகரம் வேண்டுமா? என்றால் இல்லை என்பேன் நான். போக்குவரத்து வசதி இல்லாத, தொலைத்தொடர்பு வசதி இல்லாத கடந்த காலத்தையே சமாளித்து வந்திருக்கும் நாம் இன்று ஏன்‌ அதைப்பற்றி யோசிக்க வேண்டும். கொரோனா நம்முடைய வாழ்க்கையை இன்னும் மாற்றி முழுவதும் மின்னணு உலகிற்குள் அழைத்துச் சென்று கொண்டிருக்கிறது. இன்று இரண்டாம் தலைநகரம் என்கிற கோரிக்கை பொருளற்றது. நீங்கள் எத்தனை தலைநகருக்கு செல்ல வேண்டியது இருந்திருக்கிறது? ஒரு முறை, இரு‌ முறை? அவ்வளவு தான். நீதிமன்றத்திற்காக சொன்னோமானால் ஏற்கனவே மதுரையில் உயர்நீதிமன்ற கிளை இருக்கிறதே! அப்புறம் என்ன பிரச்சினை? ஆந்திராவை நீங்கள் கை காட்டினால் அஙகே நிலைமை வேறு. தலைநகரே மூன்றாக அமையப் போகிறது. நீதித்துறைக்கு ஒரு தலைநகர், நிர்வாகத்திற்கு ஒரு தலைநகர், சட்டமன்றம் இருக்கப்போகும் ஒரு தலைநகர் என அமைக்க இருக்கிறார்கள். அப்படி இங்கே முடியாதே! இரண்டாவதாக மதுரையில...

Ethiopian highlands and Indian monsoon!

Image
Ethiopian highlands and Indian monsoon! -S.Muthukumar 10.08.2020 The title itself is meaningless, isn't it? What do you think? Is it about tying the knot for the bald head and knee? That’s how I first thought when I read this. Then I found out there is a chance to tie the knot. What I have read, I am sharing you. In India, rainfall is caused by two monsoons. The first is the southwest monsoon, which brings rain to the most parts of India, and the second is the northeast monsoon, which brings rain to Tamil Nadu, Andhra Pradesh and Kerala, located at the southern tip of the Indian peninsula. Of these, the southwest monsoon has the potential to determine India's economy. SWM is so important, not like the northeast monsoon only affects Tamil Nadu on a large scale. Well, let’s leave it that. We'll travel along the southwest monsoon winds. South West Monsoon :     It is also known as the Summer Monsoon of India. Summer monsoon is the name given to the northern hemisphere,...

எத்தியோப்பிய உயர்நிலமும் இந்தியாவின் பருவமழையும்!

Image
எத்தியோப்பிய உயர்நிலமும் இந்தியாவின் பருவமழையும்! -சு.முத்துக்குமார் 10.08.2020      தலைப்பே ஒரு பொருள் அற்றதாக இருக்கிறது அல்லவா? என்ன மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவதாக எழுதி இருக்கிறானே என்று யோசிக்கிறீர்களா? அப்படித்தான் இதை பற்றி நான் படித்த பொழுது முதலில் நினைத்தேன். பின்னர் முடிச்சு போடுவதற்கு வாய்ப்பு உள்ளது தெரிந்து கொண்டேன். அதை உங்களுடன் தற்பொழுது பகிர்ந்து கொள்கிறேன்.      இந்தியாவில் பருவமழை இரு பருவ காற்றினால் நிகழ்கிறது. முதலாவது இந்தியாவின் ஆகப் பெரும்பாலான பகுதிகளுக்கு மழையைக் கொணர்ந்து கொட்டும் தென்மேற்குப் பருவமழை, இரண்டாவது இந்திய தீபகற்பத்தின் தென் கோடி முனையில் அமைந்திருக்கும் தமிழகம் ஆந்திரம் மற்றும் கேரளாவிற்கும் மழையைத் தருவது வடகிழக்கு பருவமழை. இதில் தென்மேற்கு பருவ மழையே இந்தியாவின் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் வல்லமை படைத்ததாக இருக்கிறது. வடகிழக்கு பருவமழை தமிழகத்தை மட்டுமே பெரிய அளவில் பாதிக்கின்ற காரணத்தால் அது அவ்வளவு முக்கியத்துவம் பெறுவது இல்லை. சரி அதை விடுவோம், தென்மேற்கு பருவமழைக்கு வருவோம்.  தென்மே...