Posts

Showing posts from April, 2021

பாவேந்தர் - மறைக்கடிக்கப்பட்ட உண்மையான புரட்சிக் கவிஞர்

Image
சில விஷயங்களை நாம் பேசியாக வேண்டும். இங்கேயே பல ஆயிரம் ஆண்டுகளாகவே ஒரு பிம்பம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அந்தப் பிம்பம் சிலருக்கானதாகவும், ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்தவர்களைத் தொடர்ந்து பெருமைப்படுத்தும் விதத்தில் இருந்து வருகிறது.  அப்படி இந்த பிம்பத்தால் மிகவும் அமுக்கப்பட்டு வெளியே தெரியாத போன, பொதுவெளியில் பேசப்படாது போன ஒருவர் தான் புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன். பாரதியாரைப் பற்றி ஒரு வரி கூட தெரியாத அவரது கவிதைகளை படித்திராத பலர் அவரது பிறந்த இறந்த நாளுக்கு பதிவுகள் போடுகின்றனர். அவரைப் பற்றி கேட்டால் அந்த பதிவு போடுபவர்களுக்கு ஒன்றுமே தெரிய மாட்டேன்கிறது! ஆனால் விடுதலை பெண்கள் கல்வி என்ற பேச்சை எடுத்தவுடனே பாரதி என்று ஆரம்பித்து விடுகிறார்கள். இது ஒரு நகை முரண். ஆங்கிலேயருக்கு பயந்து புதுச்சேரியில் சென்று ஒளிந்து கொண்டு பல ஆண்டுகளாக பாட்டையே எழுதாமல் திரைமறைவு வாழ்க்கை வாழ்ந்து ஊருக்கு யோக்கியம் சொல்லிக்கொண்டிருந்த பாரதிக்கு கிடைக்கின்ற புகழ் பாரதிதாசனுக்கு கிடைக்கவில்லை! சொல்லப்போனால் பாரதிதாசனுக்கு நிகராக கூட பாரதியை வைக்க முடியாது. பாரதிதாசன் எந்த புராண இதிகாச சா