புரட்டாசி மாதம் அசைவ விலக்கு உண்மை என்ன?
புரட்டாசி மாதம் அசைவ விலக்கு என பலரும் பதிவு போட்டு வருகின்றனர்.
உண்மை என்ன?
தமிழகம் முழுவதும் இதே போல புரட்டாசி மாசம் யாருமே அசைவம் சாப்பிடுவது இல்லையா என்று பார்த்தோமானால் இது உண்மை அல்ல. இந்த பழக்கம் யாரிடம் இருக்கிறது என்றால் பெரும்பாலான வட - மேற்கு தமிழக மக்களிடமும், பெருமாளை வணங்கும் வைணவர்களிடம் தான் இருக்கிறது. தென் தமிழகத்தை எடுத்துக்கொண்டால் மதுரைக்கு தெற்கே புரட்டாசி மாதம் அசைவம் சாப்பிடுவது இல்லை என்பதெல்லாம் கட்டுக்கதை. அதுவும் கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்த பேச்சுக்கே இடமில்லை. தமிழகத்தைப் பொறுத்தவரை தெற்கே செல்லச் செல்ல தமிழினத்தின் கலப்பு இல்லாத உண்மையான பண்பாட்டு கூறுகள் வெளிப்படும். இந்த விஷயத்திலும் அதுதான். தமிழகத்தின் தென்கோடி பகுதிகளில் புரட்டாசி மாதத்தை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை கணக்கில்.
சரி புரட்டாசி மாதம் அசைவம் சாப்பிட்டால் உடல் நலத்திற்கு கேடாமே? உண்மையா?
ஏன் புரட்டாசி மாதம் சாப்பிட கூடாத கூடாது என்றால் அதற்கு உடனே இந்த மாதம், வெயில் முடிந்து மழை தொடங்கக் கூடிய காலம். ஆகவே பூமியில் இருந்து வெப்பம் அதிக அளவில் வெளிப்படும். எனவே அசைவம் சாப்பிடுவது உடல் நலத்துக்கு கேடு உண்டாக்கும் என்று கிளப்பி விடுகிறார்கள். இதில் எள்ளளவும் உண்மை இல்லை. உலகத்தின் எந்தப் பகுதிக்குச் சென்றாலும் அவர்கள் சாப்பிடும் உணவு அந்தப் பகுதியின் தட்ப வெப்பத்தை பொறுத்தே அமையும். ஆனால் இந்த தேதி, இந்த மாதம் அசைவம் சாப்பிட்டால் கெடுதி வரும் என்பது ஆய்வில் எங்குமே நிரூபிக்கப்படவில்லை.
இது எல்லாம் காசு பார்ப்பதற்காக பார்ப்பான் செய்து வைத்த வேலை. அவனுக்கு புரட்டாசி மாதத்தில் பெருமாள் கோயில்களில் கூட்டம் கூட வேண்டும் கல்லாப்பெட்டி நிரம்ப வேண்டும் இது மட்டும் தான் நோக்கம். ஏனென்றால் புரட்டாசி கழிந்து வரக்கூடிய ஐப்பசி கார்த்திகை மார்கழி மாதங்கள் விழாக்கள் இல்லாத மாதங்களாகும். தமிழகத்தில் விவசாய பெருங்குடி மக்கள் வேளாண் வேலையில் மும்முரமாக இருப்பார்கள். ஆகவே அவர்களுக்கு விழா கொண்டாடுவதற்கு எல்லாம் நேரம் கிடையாது. எனவே புரட்டாசி மாதத்தை பெருமாள் மாதமாக கூட்டத்தை ஈர்த்து காசை சேமித்து வைப்பதற்காக மாற்றிவிட்டார்கள். மேலும் தாழ்த்தப்பட்ட மக்களிடம் இந்த புரட்டாசி மாத அசைவ விலக்கு என்பதெல்லாம் இல்லை. ஏன் இல்லை? ஏனென்றால் அவர்கள் எல்லாம் அந்த காலத்தில் கோயில்களில் நுழைய அனுமதிக்கப்படவில்லை. பிறகு எப்படி அவர்களுக்கு இந்த கட்டுப்பாடுகள் பொருந்தி வரும்?
இன்று தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாள். அவர் கூறிய ஒன்றை சொல்லி இதை முடித்துக் கொள்கிறேன்.
'உன் கடவுளை விட, உன் சாஸ்திரத்தை விட, உன் முன்னோர்களை விட, உன் வெங்காயம் விளக்கமாத்தை விட உன் அறிவு பெருசு. அதை சிந்தி!'
Comments
Post a Comment