கே.பி.என் தெரியும் நமக்கெல்லாம் வி.பி.என். தெரியுமா?
கொரோனா ஊரடங்கு காலத்திற்குப் பின் விபிஎன் என்பது மிகவும் புகழ் பெற்றுவிட்டது. சரி விபிஎன் என்றால் என்ன?
விபிஎன் (மெய்நிகர் தனி வலையமைப்பு) என்பது பொது மற்றும் தனிநபர் நெட்வொர்க் க்கு பாதுகாப்பு மற்றும் ரகசிய காப்பு அளிக்கும் ஒரு இணைப்பு முறையாகும். சான்றாகச் சொல்லவேண்டுமானால் wi-fi ஹாட்ஸ் பாட்டுகள் தனக்கே உரிய விபிஎன் என்னும் இணைப்பை பயன்படுத்தி தகவல்களை பத்திரப்படுத்தி கொள்ளும். அதாவது தங்களிடம் கடவுச்சொல் கேட்ட பின்பு தானே இணைப்பு தரும், அதுதான் அந்த ரகசிய நெட்வொர்க். அண்மைக் காலங்களில் விபிஎன் மிகவும் பிரபலமடைந்து வருகிறது. காரணம் பலரும் வீட்டிலிருந்தே வேலை செய்கிறார்கள், மேலும் அரசுக்கு தெரியாமல் அரசால் தடை செய்யப்பட்ட இணையதளங்களை பார்க்க முயற்சிக்கிறார்கள். எப்படி விபிஎன் நமக்கு ரகசிய காப்பு அளிக்கிறது என்றால் நம்முடைய வலைப்பின்னலின் ஐபி முகவரி பதிலாக வேறு ஒரு ஐபி முகவரி மூலமாக இணைய இணைப்பை அளிக்கிறது. விபிஎன் சந்தாதாரர்கள் தங்கள் விருப்பப்படும் ஐபி முகவரியை நிறுவனம் அளித்திருக்கும் பட்டியலிலிருந்து தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். எடுத்துக்காட்டாக, நீங்கள் சென்னையிலிருந்து இணையதளத்தில் இணைய நினைக்கிறீர்கள், ஆனால் விபிஎன் மூலமாக நீங்கள் கோலாலம்பூரில் இருப்பதாக காட்டிக் கொள்ளலாம். விபிஎன் மிகவும் மேம்படுத்தப்பட்ட என்கிரிப்ஷன் புரோட்டா கால்களை அதாவது பாதுகாப்பு குறியீடுகளை பயன்படுத்துவதன் காரணமாக தங்களது இணையத்திலிருந்து தகவல்கள் வெளியில் கசியாமல் தவிர்க்கப்படும். ஆகவேதான் அண்மைக்காலங்களில் வீட்டிலிருந்து வேலை பார்க்கும் வாய்ப்பை அளித்து இருக்கும் நிறுவனங்கள் அனைத்தும் விபிஎன் உடன் இணைக்க சொல்லி வருகிறார்கள். தங்களது நெட்வொர்க்கை யாரும் கவர்ந்துவிடாமல் தடுக்க முடியும்.
எளிமையான விபிஎன் என்பது,
தங்களது ஐபி முகவரியை மறைக்கும்,
ஐபி முகவரியை மாற்றி தரும்,
தகவல் பரிமாற்றத்தை பாதுகாக்கும்,
தங்களது இருப்பிடத்தை காட்டிக் கொடுக்காது,
தடைசெய்யப்பட்ட இணையதளங்களுள் நுழைய முடியும்.
கீழ்க்காணும் படத்தைப் பாருங்கள் எளிமையாக புரியும்.
சரி விபிஎன் இணைப்பை நான் எப்படி பெறுவது? விபிஎன் இணைப்பைப் பெறுவது மிக எளிது. தங்களது மூலமாகவும் நீங்கள் விபிஎன் நெட்வொர்க்கில் இணைந்து இணையதளத்தில் உலாவ முடியும். பல நிறுவனங்கள் இலவசமாக விபிஎன் சேவையை அளிக்கின்றன. எனினும் விபிஎன் சேவையை நல்ல நோக்கத்திற்காக பயன்படுத்தி முன்னேறுவோம்.
Comments
Post a Comment