தமிழகத்திற்கு ஏன் இரண்டாம் தலைநகரம் தேவையில்லை?
தமிழகத்தில் இரண்டாம் தலைநகரம் ஏன் தேவையில்லை?
தமிழகம் - இந்தியாவின் முன்னணி மாநிலங்களுள் ஒன்று. தமிழகத்தின் தலைநகரும் ஏறக்குறைய மற்ற அனைத்து மாநிலங்களைப் போல ஒரு மூலையிலேயே அமைந்துவிட்டது. அதனாலேயே நமக்கு இரண்டாம் தலைநகரம் வேண்டுமா? என்றால் இல்லை என்பேன் நான். போக்குவரத்து வசதி இல்லாத, தொலைத்தொடர்பு வசதி இல்லாத கடந்த காலத்தையே சமாளித்து வந்திருக்கும் நாம் இன்று ஏன் அதைப்பற்றி யோசிக்க வேண்டும். கொரோனா நம்முடைய வாழ்க்கையை இன்னும் மாற்றி முழுவதும் மின்னணு உலகிற்குள் அழைத்துச் சென்று கொண்டிருக்கிறது. இன்று இரண்டாம் தலைநகரம் என்கிற கோரிக்கை பொருளற்றது. நீங்கள் எத்தனை தலைநகருக்கு செல்ல வேண்டியது இருந்திருக்கிறது? ஒரு முறை, இரு முறை? அவ்வளவு தான். நீதிமன்றத்திற்காக சொன்னோமானால் ஏற்கனவே மதுரையில் உயர்நீதிமன்ற கிளை இருக்கிறதே! அப்புறம் என்ன பிரச்சினை? ஆந்திராவை நீங்கள் கை காட்டினால் அஙகே நிலைமை வேறு. தலைநகரே மூன்றாக அமையப் போகிறது. நீதித்துறைக்கு ஒரு தலைநகர், நிர்வாகத்திற்கு ஒரு தலைநகர், சட்டமன்றம் இருக்கப்போகும் ஒரு தலைநகர் என அமைக்க இருக்கிறார்கள். அப்படி இங்கே முடியாதே! இரண்டாவதாக மதுரையில் சட்டமன்றம் கட்டி ஓரிரு கூட்டங்களை நடத்துவதால் எந்தப் பயனும் இல்லை. அது அரசாங்கப் பணத்தை வீணடிப்பது. பிறர் சொல்வது போல் மதுரையை இரண்டாம் தலைநகராக ஆக்கினாலும் வேலைவாய்ப்புகளும் தொழிலும் குவிந்துவிடாது. அது அரசின் வழிகாட்டுதலில் தான் இருக்கிறது என்பதையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். துணைத் தலைநகர் ஆகாமலேயே மதுரையில் தொழில் வாய்ப்புகளை உண்டாக்க அரசு நினைத்தால் முடியும்.
இத்தனை நாள் எழாத பிரச்சினை ஏன் இன்று எழுப்பப்படுகிறது?
ஒரு சிலரின் சுய லாப கணக்கிற்காக இதை கிளப்பி வருகிறார்கள். ஓட்டு அரசியல் செய்யலாம் என நினைக்கிறார்கள். ஆகவே இதனுள் தலையைக் கொடுத்துக் கொள்ளாதீர்கள்.
Comments
Post a Comment