Posts

Showing posts from July, 2020

முருகன் அசைவக் கடவுளா?

Image
சில மாதங்களுக்கு முன்பு சுகிசிவம் அவர்கள் ஒரு காணொளி பதிவிட்டதினால் ஒரு சர்ச்சை கிளம்பியது. முருகனும் சுப்ரமணியனும் வேறு வேறா என்பது அதனுடைய தலைப்பு. நாம் அங்கே சுற்றி இங்கே என்று மீண்டும் அதே புள்ளியில் வந்து தான் இருக்கிறோம். தமிழர்கள் வழிபட்ட முருகனும் இன்றைய சுப்பிரமணியனும் வேறு வேறா? முருகர் அசைவ கடவுளா? எனக் கேட்டால் நான் சொல்லி விடுவேன் ஆம் என்று. ஆதாரம் கேட்பார்கள், எதிர்க் கேள்வி கேட்பவர்கள். அவர்களுக்காகவே இந்த பதிவு. பேராசிரியர் தொ. பரமசிவன் அவர்கள் சொல்வார்கள், பல தெய்வங்கள் பிறந்திருக்கின்றன, பல தெய்வங்கள் இறந்திருக்கின்றன. அதாவது ஒரு காலகட்டத்தில் ஒரு தெய்வ வழிபாடு மேலோங்கி நின்று பின்பு அறவே இல்லாது போகும். தமிழகத்தில் ஒரு காலத்தில் வழிபடப்பட்ட மூதேவி எனப்படும் மூத்த தேவி தற்காலத்தில் யாராலும் தொழப்படுவது இல்லை. அந்த தெய்வம் இறந்துவிட்டது. இன்று பல தெய்வங்கள் புதுப்பிறவி எடுத்துக் கொண்டு இருக்கின்றன. சான்றாக சாய்பாபாவைச் சொல்லலாம். புற்றீசல் போல பெருகிக் கொண்டே வருகிறார். நாம் முருகருக்கு வருவோம். சாய்பாபாவை அப்புறம் பார்ப்போம். தமிழின் மிகத் தொன்மையான நூலாக கருதப்படு

குருக் மொழி - தமிழின் தங்கை

Image
சில நாட்களுக்கு முன்னர் ஒரு கேள்வி எழுப்பி இருந்தேன். ஜார்க்கண்ட் மாநிலத்தில் தமிழா? தமிழ் போன்ற மொழியா? இந்தக் கேள்விக்கான பதில் இன்று இதோ. நம் எல்லோருக்கும் தெரியும் இந்தியாவிலேயே இரு முக்கிய மொழிக்குடும்பங்கள் இருக்கின்றன. ஒன்று திராவிட மொழி குடும்பம் மற்றொன்று இந்தோ-ஆரிய மொழிக் குடும்பம்.  தமிழ், திராவிட மொழிக் குடும்பத்தின் மூத்த மொழியாக இருக்கிறது. திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மொழிகள் வெறும் தென்னிந்தியாவில் மட்டும் அல்லாது மத்திய இந்தியாவிலும் மற்றும் வட இந்தியாவிலும் பேசப்படுகின்றன. எண்ணிக்கையில் குறைந்த அளவில் இருந்தாலும் அந்த மொழிகள் சொல்லத் தக்கவையே! திராவிட மொழிக் குடும்பத்தில் வட பிரிவில் இருப்பது பிராகுயி, மால்தோ, குருக் போன்ற மொழிகள் தான்.  இதிலே பிராகுயி மொழி பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தானில் பேசப்படுகிறது. அதற்கு அடுத்தாற்போல உள்ள மால்தோ மொழி மேற்கு வங்காளம் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தின் ராஜ்மஹால் மலைப்பகுதிகளில் வசிப்பவர்களால் பேசப்படுகிறது. குருக் மொழி கடைசியாக வருகிறது. குருக் மொழி: நான் கேட்ட கேள்விக்கான பதில் இந்த குரூக் மொழிதான். எங்கள் ஆலையில் வேலை பார

மேகங்கள் பல விதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்

Image
தொடர்ந்து அரசியல் பதிவுகளாக இருந்து வரும் சூழ்நிலையில் இன்று கொஞ்சம் வித்தியாசமாக வானவியலைப் பார்ப்போம். வகைவகையான மேகங்கள்: உலக வானிலை ஆய்வு நிறுவனத்தின் அறிக்கை கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட வகை மேகங்கள் இருப்பதாக சொல்கிறது. அவற்றை சுருக்கி ஒரு பத்து வகைகளை மட்டும் கருத்தில் கொண்டு அவற்றைப் பற்றி விரிவாக காண்போம். 1. தாழ்நிலை மேகங்கள் (குமுலஸ், இசுறேடஸ், இசுறேடோகுமுலஸ்) இவை கடல்மட்டத்திலிருந்து 6500 அடிக்கு உள்ளாக இருப்பவை. 2. நடுநிலை மேகங்கள் (அல்டோகுமுலஸ், நிம்போஸ்றேடஸ், அல்டோஸ்றேடஸ்) இவை கடல் மட்டத்திலிருந்து 6500 அடி முதல் 20,000 அடிக்கு உள்ளாக உருவாகும் மேகங்கள். 3. உயர் நிலை மேகங்கள் (சிர்ரஸ், சிர்ரோகுமுலஸ், சிர்ரோஸ்றேடஸ்) இவை கடல் மட்டத்தில் இருந்து 20,000 அடிக்கு மேலான உயரத்தில் இருக்கும் மேகங்கள். 4. திரள் மேகங்கள் பெயருக்கேற்றார் போலவே திரள் மேகங்கள், வளிமண்டல கீழ் அடுக்கில் இருந்து கிளம்பி வளிமண்டல மேல் மேலடுக்கு வரை உயர்ந்து காணப்படுபவை. [ இந்த மேகங்களின் பெயர்கள் தமிழாக்கம் இன்னும் செய்யப்படவில்லை. நீங்கள் முடிந்தால் தமிழாக்கம் செய்து சொல்லுங்கள்.] நம்