பாவேந்தர் - மறைக்கடிக்கப்பட்ட உண்மையான புரட்சிக் கவிஞர்

சில விஷயங்களை நாம் பேசியாக வேண்டும்.
இங்கேயே பல ஆயிரம் ஆண்டுகளாகவே ஒரு பிம்பம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அந்தப் பிம்பம் சிலருக்கானதாகவும், ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்தவர்களைத் தொடர்ந்து பெருமைப்படுத்தும் விதத்தில் இருந்து வருகிறது. 
அப்படி இந்த பிம்பத்தால் மிகவும் அமுக்கப்பட்டு வெளியே தெரியாத போன, பொதுவெளியில் பேசப்படாது போன ஒருவர் தான் புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.
பாரதியாரைப் பற்றி ஒரு வரி கூட தெரியாத அவரது கவிதைகளை படித்திராத பலர் அவரது பிறந்த இறந்த நாளுக்கு பதிவுகள் போடுகின்றனர். அவரைப் பற்றி கேட்டால் அந்த பதிவு போடுபவர்களுக்கு ஒன்றுமே தெரிய மாட்டேன்கிறது! ஆனால் விடுதலை பெண்கள் கல்வி என்ற பேச்சை எடுத்தவுடனே பாரதி என்று ஆரம்பித்து விடுகிறார்கள். இது ஒரு நகை முரண்.

ஆங்கிலேயருக்கு பயந்து புதுச்சேரியில் சென்று ஒளிந்து கொண்டு பல ஆண்டுகளாக பாட்டையே எழுதாமல் திரைமறைவு வாழ்க்கை வாழ்ந்து ஊருக்கு யோக்கியம் சொல்லிக்கொண்டிருந்த பாரதிக்கு கிடைக்கின்ற புகழ் பாரதிதாசனுக்கு கிடைக்கவில்லை! சொல்லப்போனால் பாரதிதாசனுக்கு நிகராக கூட பாரதியை வைக்க முடியாது.
பாரதிதாசன் எந்த புராண இதிகாச சாத்திரங்களையும் மேற்கொண்டு அடிக்கோடிட்டு தன்னுடைய கவிகளை எழுதவில்லை. மக்களை புரட்சிக்கு உட்படுத்துவதாகவும், அடிமைத்தளையிலிருந்து விடுதலை பெற எழுச்ச ஊட்டுவதாகவும், பெண் விடுதலையைப் பேசுவதாகவும் பாரதிதாசனது பாடல்கள் அமைகின்றன. திராவிட இயக்க சிந்தனைகளை பரப்பினார் என்பதற்காக நான் அவரைக் குறித்து இவ்வளவு பெருமிதமாக எழுதவில்லை. காரணம் இருக்கிறது, ஒருவர் ஊருக்கு யோக்கியம் சொல்கிறார் எனில் அவர் முதலில் யோக்கியனாக இருக்க வேண்டும். பெரியார், தான் தினமும் கோவிலுக்கு சென்று கொண்டு மத சாதிகளை நம்பிக் கொண்டு பின் அதற்கு எதிராக பேசினார் என்றால் எப்படி இருக்கும்? அதேபோலத்தான் பாரதியும். இந்திய விடுதலைக்கு என கூக்குரலிட்டவர் புதுச்சேரியில் சென்று ஒளிந்து கொண்டார். ஒளிந்து கொண்டது மட்டுமா ஆங்கில அரசுக்கு பயந்து ஒரு வரி கூட எழுதாமல் மௌனம் காத்து வந்தார். மேலும் பாடல்களில் வாய்ப்பு கிடைக்கிற போதெல்லாம் பார்ப்பனனை உயர்த்தியும், தன்னுடைய ஆரிய பாசத்தை வெளிக்காட்டியும் வந்தார். 

ஆனால் பாரதிதாசன் அப்படியல்ல. தான் எழுதிய கவிதைகளுக்கு பயந்து யாரிடமும் சென்றதில்லை! எதையும் தைரியமாக சொல்லிய அவர் அதன்படி வாழ்ந்தும் காட்டியவர். 
தமிழனை தமிழனாக உணர்வு கொள்ள செய்த பெருமை மிக்கவர் பாவேந்தர்.

அவரது பெயரில் கடந்த 2010ஆம் ஆண்டு சென்னையில் மிகப்பெரிய பாவேந்தர் செம்மொழி தமிழாய்வு நூலகம் ஒன்றை கலைஞர் அவர்கள் அமைத்தார். அடுத்து வந்த அம்மையார் அந்த நூலகத்தை இல்லாது ஒழித்து விட்டது.
புதுச்சேரி மாநிலப் பாடலாக பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய பாடல்தான் இருக்கிறது!

'நித்திரையில் இருக்கும் தமிழா சித்திரை அல்ல புத்தாண்டு' என்று தமிழ் உணர்ச்சி ததும்ப தமிழனை எழுச்சியூட்டிய பாவேந்தர் அவர்களை என்றும் நன்றியுடன் நினைவு கொள்வோம்!
அவர் பிறந்த நாள் இன்று ( ஏப்ரல் 29, 1891)

Comments

Popular posts from this blog

முருகன் அசைவக் கடவுளா?

மேகங்கள் பல விதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்

குருக் மொழி - தமிழின் தங்கை