முத்தையா முரளிதரன் படம்: விஜய் சேதுபதி நடிக்க எதிர்ப்பு! இலங்கை தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள்?
நான் பொதுவாக எந்த ஊரு செய்தி வந்தாலும் அந்தத் துறை சார்ந்த நண்பர்களிடம் அதைப் பற்றி விவாதிப்பது வழக்கம்.
இலங்கையைச் சேர்ந்த தமிழ் நண்பர் ஒருவர். தொடர்பு கொண்டு பேசினேன். முத்தையா முரளிதரன் வாழ்க்கை படமான '800' ஐ முன்வைத்து எழுந்திருக்கும் சர்ச்சைகளை இலங்கையில் எப்படி பார்க்கிறார்கள் என்பதை தெரிந்து கொண்டேன்.
அரசியல் விளம்பரம் இனவாதம் எல்லாவற்றையும் தாண்டி பொதுவாக முரளிதரன் விஷயத்தை பேச வேண்டியது கடமையாகிறது. முரளிதரன் இலங்கையின் மலையகத்தில் பிறந்த இந்திய வம்சாவளி தமிழர். சென்னை பெண்ணை திருமணம் முடித்தவர். இவர் மேல் மனக்கசப்பு எங்கே தொடங்குகிறது என்றால் ஒரு பேட்டியில் இலங்கை ஒரு பௌத்த நாடு தன்னை ஒரு இலங்கையன் என்றும் அடையாளப்படுத்துகிறார். எனினும் தனக்கு நன்றாக தமிழ் பேசத் தெரியும் என்றும் அதே பெட்டியில் தெரிவிக்கிறார். என்னதான் அரசியலமைப்பு ரீதியாக இலங்கை ஒரு பௌத்த நாடாக இருந்தாலும் இலங்கையில் தமிழ் சிங்களம் என இரு மொழி பேசும் நான்கு இனங்கள் இருக்கின்றனர். அப்படி இருக்கும்போது இவரே இலங்கையை ஒரு பௌத்த நாடு என அடையாளப்படுத்துவது மனக்கசப்பை உண்டாக்கியதாக தெரிவிக்கிறார். இலங்கையைப் பொறுத்தவரையிலும் என்ன வேண்டுமானாலும் பேசி விட்டு உயிர் வாழலாம் என்ற நிலை இல்லை. நாம் வாழ வேண்டும் என்றால் சில விஷயங்களை கட்டுப்படுத்திக் கொண்டு தான் இருக்க வேண்டும். சிம்பு போல தோன்றியதை எல்லாம் பேசிக்கொண்டு இருக்க முடியாது. அத்தனை சிங்களவர்களுக்கு மத்தியில் ஒரு தமிழராக இலங்கை அணியில் சேர்வது மிக கடினமான ஒன்றுதான். அதற்காக அவர் தமிழ் அடையாளத்தைப் பெரிதாக பூசிக் கொள்ளவில்லை. இலங்கையில் ஒரு குறிப்பிட்ட உயரத்திற்கு மேலே செல்வதற்கு பௌத்த மதமும் சிங்கள மொழியும் அவசியமானதாகிவிடுகிறது. இலங்கை அரசியலமைப்பு குடியரசுத் தலைவருக்கான தகுதியாக பௌத்த மதத் தழுவலையும் சிங்களத்தை தாய்மொழியாகப் பெற்றிருப்பதையும் கட்டாயமாக்குகிறது. இலங்கையை பொறுத்தமட்டில் தோனியின் வாழ்க்கை படமோ அல்லது சச்சினின் வாழ்க்கை படமோ வந்தால் வரவேற்க அவரது ரசிகர்கள் அதிக அளவில் இங்கே இருக்கின்றனர். முரளிதரனுக்கு மதேபூர் ரசிகர்கள் இருந்தாலும் ரசிகர்களை காட்டிலும் எதிர்ப்பாளர்கள் சற்று கூடுதலாக இருக்கிறார்கள். ஏனென்றால் அவர் பேசியது இங்கு பலரை காயப்படுத்தி இருக்கிறது. விஜய் சேதுபதி போன்ற பெரிய நடிகர்கள் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பது பெருமையாக இருந்தாலும் அவர்களுக்கு இது ஏனோ இடிக்கிறது. புரிகிறதா அவர்களுக்கு இடிக்கிறது. இப்படி பேசின ஒருவருக்காக வாழ்க்கை படம்? அதுவும் விஜய் சேதுபதி நடிப்பில்! தோனிக்கு சில குறிப்பிட்ட எதிர்ப்பாளர்களை உண்டு,ஆனால் முரளிதரனை பொறுத்தவரையில் எதிர்ப்பாளர்கள் எண்ணிக்கை கூடுதல். அவர்கள் மட்டுமல்ல நடுநிலையாளர்களும் ஆதரவாளர்களும் இருக்கின்றனர். முரளிதரன் அப்படித்தான் சொல்லி ஆகவேண்டும், அவர் அணியில் இருக்க வேண்டுமானால் இதை செய்துதானே ஆகவேண்டும் என்றுதான் நான் நினைக்கிறேன். தமிழர்களுக்கு எதிராக யார்தான் பேசவில்லை? தமிழர்களை காட்டிக் கொடுத்தவர்கள் ஏமாற்றியவர்கள் என பார்த்தால் பெரிய பட்டியலே போடலாம். அப்படி இருக்கையில் இவர் பேசியதை மட்டும் தூக்கிப் பிடித்துக் கொண்டு எதிர்ப்பு தெரிவிப்பது எனக்கு சரியாகப் படவில்லை. இன்று வலைத்தளங்களில் உலா வரும் செய்திகளை படிக்கும் பொழுது ஏன் இந்த விடயம் மிகைப் படுத்தப் படுகிறது என்று தான் எனக்கு தோன்றுகிறது!
குறிப்பு: இது என்னுடைய கருத்து அல்ல. இலங்கை தமிழர் ஒருவரின் கருத்து.
என்னுடைய கருத்தையும் நான் முன்னரே தெரிவித்துவிட்டேன். படத்தில் ஒன்றும் அவர் சிங்களத்திற்கு ஆதரவாக போவது ராஜபக்சேவுக்கு ஆதரவாக இருப்பதாக காட்சிகள் வடிவமைக்கப் பட்டதாக தெரியவில்லை. அவர் சிறுவயது முதல் கடினமாக உழைத்து உயரத்தை அடைந்து அதை பற்றிதான் படம் பேசப் போகிறது. இதில் தவறு இருப்பதாக தெரியவில்லை.
Comments
Post a Comment