புரட்டாசி மாதம் அசைவ விலக்கு உண்மை என்ன?
புரட்டாசி மாதம் அசைவ விலக்கு என பலரும் பதிவு போட்டு வருகின்றனர். உண்மை என்ன? தமிழகம் முழுவதும் இதே போல புரட்டாசி மாசம் யாருமே அசைவம் சாப்பிடுவது இல்லையா என்று பார்த்தோமானால் இது உண்மை அல்ல. இந்த பழக்கம் யாரிடம் இருக்கிறது என்றால் பெரும்பாலான வட - மேற்கு தமிழக மக்களிடமும், பெருமாளை வணங்கும் வைணவர்களிடம் தான் இருக்கிறது. தென் தமிழகத்தை எடுத்துக்கொண்டால் மதுரைக்கு தெற்கே புரட்டாசி மாதம் அசைவம் சாப்பிடுவது இல்லை என்பதெல்லாம் கட்டுக்கதை. அதுவும் கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்த பேச்சுக்கே இடமில்லை. தமிழகத்தைப் பொறுத்தவரை தெற்கே செல்லச் செல்ல தமிழினத்தின் கலப்பு இல்லாத உண்மையான பண்பாட்டு கூறுகள் வெளிப்படும். இந்த விஷயத்திலும் அதுதான். தமிழகத்தின் தென்கோடி பகுதிகளில் புரட்டாசி மாதத்தை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை கணக்கில். சரி புரட்டாசி மாதம் அசைவம் சாப்பிட்டால் உடல் நலத்திற்கு கேடாமே? உண்மையா? ஏன் புரட்டாசி மாதம் சாப்பிட கூடாத கூடாது என்றால் அதற்கு உடனே இந்த மாதம், வெயில் முடிந்து மழை தொடங்கக் கூடிய காலம். ஆகவே பூமியில் இருந்து வெப்பம் அதிக அளவில் வெளிப்படும். எனவே அசைவம் சாப்பிடுவது உடல்...