-காவ்யா பெரியசாமி
மன நல நோய்களுக்கு இது தான் சிறந்த சிகிச்சை என்று பொதுவாக எதுவும் கூற முடியாது! ஒவ்வொரு நோயாளியின் நடத்தையை வைத்தே அதற்கு ஏற்ற வகையில் சிகிச்சை அளிப்பார்கள்! மனச்சோர்வு என்பது ஒரு மேலோட்டமான கூற்று. அதற்கு கீழ் பல விதமான மன நோய்கள் உள்ளன, like bipolar disorder, Parkinson's disease, schizophrenia, Border line personality disorder, anxiety disorder etc., சிலர் யாரிடமும் பேசாமல் அமைதியாகவே இருப்பார்கள், சிலர் தன்னிலை அறியாது எதேனும் பேசிக்கொண்டே இருப்பார்கள், சிலர் மிகவும் முரட்டுத்தனமாக நடந்துக் கொள்வார்கள், சிலர தன்னைச் சுற்றியுள்ள அனைவரையும் சந்தேகித்துக் கொண்டே இருப்பார்கள், அனைவரும் தங்களுக்கு தீங்கு விளைவிக்கப் போகிறார்கள் என்று வலுவாக நம்புவார்கள், அது அவர்களது குடும்பத்தினராக இருந்தாலும் சரி! அதில் சிலருக்கு தற்கொலை எண்ணங்களும் வந்து போகும்! இவ்வாறு இருக்க நாம் இது தான் தீர்வு என்று எதையும் கூற முடியாது! மாறாக இந்த எண்ணங்களின்/ நடத்தையின் வீரியத்தை குறைக்க முடியும்! நான் கூறியது போலவே இது நம் மூளையில் திரவ மாற்றம் காரணமாக ஏற்படும் ஓர் நோய்! அதற்கு நாம் சிறந்த நரம்பியல் நிபுணரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டும்! அவர்கள் இந்த திரவ மாற்றத்தை சீராக்க anti-depressants கொடுப்பார்கள்! அதை உட்கொண்டால் முழுமையாக குணம் அடைவார்கள் என்று கூற முடியாது ஆனால் நான் கூறிய அறிகுறிகளை கட்டுப்படுத்த முடியும்! ஆதலால் இதற்கு ஆலோசனை மட்டுமே ஒரு தீர்வாக இருக்க முடியாது! ஒருவேளை இது ஆரம்பக் கட்டமாக இருந்தால் அதற்கு கண்டிப்பாக நல்ல மனநல ஆலோசகரின் ஆலோசனை போதுமானது! ஆனால் நான் மேல் கூறியவாறு தங்கள் நடத்தையில் மாற்றம் தெரிந்தால் இதற்கு நாம் ஓர் நரம்பியல் நிபுணரையே அணுக வேண்டும்!
இது நான் என் தனிப்பட்ட அனுபவத்தில் தெரிந்துக் கொண்டவை. இது தான் சரி, இது இப்படி தான் என்று என்னால் கூற முடியாது! இதில் எதேனும் எழுத்துப் பிழைகள் இருந்தால் மன்னக்கவும்!
நல்ல பதிவு. நன்றி
ReplyDelete