ஐரோப்பிய வாகையர் ஆட்ட இறுதிப் போட்டி - சாதனைகள் பல கண்டு பட்டம் பெற்ற பேர்ன் முனிச்!
லிஸ்பன் நகரில் நேற்று நடந்த 2019-20 ஐரோப்பிய வாகையர் ஆட்ட (சாம்பியன்ஸ் லீக்) இறுதி போட்டியில் ஜெர்மனியின் பேர்ன் முனிச் அணி, பிரான்சின் பாரிஸ் செயின்ட் ஜெர்மெய்ன் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி கொண்டது. ஆட்ட சுவாரசியங்கள்: பேர்ன் முனிச் அணிக்கான கோலை கிங்ஸ்லே கோமன் அடித்து, அந்த அணிக்கு வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியை ஏழு ஆண்டுகளுக்குப் பின் பெற்றுத் தந்திருக்கிறார். பேர்ன் முனிச் அணி ஆறாவது முறையாக வாகையர் பட்டம் சூடுகிறது. 2013க்கு பின் ஏழு ஆண்டுகள் காத்திருந்து இந்த சாதனையைப் படைத்திருக்கிறது. பேர்ன் முனிச் அணி தான் இன்று பெற்ற ஆறாவது பட்டத்துடன் வாகையர் ஆட்ட வரலாற்றில் அதிக முறை பட்டம் பெற்ற மூன்றாவது அணியாக உருவெடுத்துள்ளது. [முதல் - ரியல் மாட்ரிட் (13முறை), இரண்டு - மிலன் (7முறை)] பேர்ன் முனிச் அணி தான் பெற்ற ஒரு கோல் மூலமாக மற்றொரு சாதனையை நிகழ்த்தி இருக்கிறது. ஐரோப்பிய வாகையர் ஆட்ட வரலாற்றில் 500 கோல்கள் அடித்த மூன்றாவது அணியாக இடம்பெற்று விட்டது. பேர்ன் முனிச் அணிக்கு வெற்றி தேடித் தந்த கிங்ஸ்லே கோமன் எதிரணியின் சொந்த களமான பாரிசைச் சேர்ந்தவர் மற்றும் பிஎஸ்ஜி இளையோர் ப