இந்தியாவின் தற்சார்பில் சீனா எங்கே வந்தது? பகுதி-1
இந்தியாவின் தற்சார்பில் சீனா எங்கே வந்தது? - சு.முத்துக்குமார் 27.06.2020 இன்றைக்கு நாடு முழுக்க மிகப்பெரிய பரப்புரை கிளம்பியிருக்கிறது. அது என்னவெனில் சீன பொருட்களை, சீனத் தயாரிப்புகளை, சீன நாட்டின் செயலிகளை புறக்கணிக்க வேண்டும் என்பதாம். உண்மை என்ன? நம்மால் முற்றிலுமாக சீன பொருட்களை புறக்கணித்து விட முடியுமா? நாம் சீனப் பொருட்களை புறக்கணிப்பதால் சீனாவிற்கு ஏற்படும் பாதிப்பு எந்த அளவு இருக்கும்? நமக்கு ஏற்படும் பாதிப்பு எந்த அளவில் இருக்கும்? பொறுங்கள்! இதற்கெல்லாம் பதில்களை இப்போது பார்க்கலாம். இந்தியாவின் வளங்கள்: நாம் எல்லாருக்கும் தெரியும் இந்தியா உலகின் மக்கள் தொகையில் 18% கொண்டு உலக அளவில் மக்கள் தொகையில் இரண்டாம் இடம் வகிக்கிறது. எனினும் உலகின் நீர் வளத்தில் வெறும் 4% தான் நம்மிடம் இருக்கிறது. வனவளம், மீன்வளம், நிலக்கரி ஆகியவற்றை கணிசமான அளவில் இந்தியா பெற்றிருக்கிறது. எண்ணெய் இருப்பு அதிக அளவில் இல்லாவிட்டாலும் குறிப்பிடத்தக்க அளவு இந்தியாவில் இருக்கிறது. இயற்கை எரிவாயு மற்றும் ஷேல் கேஸ் நிலக்கரி படுகை எரிவாயு ஆகியவையும் இந்தியாவில் காணக்கிடைக்கிறது. இவை போக,...