இறந்த பின்னும் வாழ முடியும்.
நண்பர்களுக்கு வணக்கம்!
என்னுடைய நண்பன் நல்ல கிரியேட்டிவ் மனம் கொண்டவன்.
இன்று ஒரு நல்ல கேள்வி கேட்டான்.
நீங்களும் உங்கள் பதிலைச் சொல்லலாம்.
எதிர்காலத்தில் நம்முடைய எண்ணங்களையும் நனவாக்க முடிந்தால் எப்படி?
அதாவது நாம் எப்படி சிந்திக்கிறோம் இருக்கிறோம் என்பது தானே நம் மனது. அதை AI மூலமாக படித்து ஒரு எந்திரனுக்கு அளித்து அதை நாம் ஆக்கிவிட்டால்??
நேற்று சில கேள்விகள் கேட்டிருந்தேன் இல்லையா? அதற்கு என்னுடைய நண்பன் வாயிலாக நான் தெரிந்து கொண்ட தகவல்களை உங்களுக்கு இங்கே தெரியப்படுத்துகிறேன். டெஸ்லா நிறுவனத்தின் எலான் மஸ்க் அவர்கள் அறிமுகப்படுத்தியுள்ள நியூராலின்க் என்ற புதிய கருவியின் மூலமாக நம்முடைய மூளையின் செயல்பாடுகளை பதிவு செய்து அதை வேறு ஒரு மனிதருக்கு பதிவேற்ற முடியும். அதே போல நம்முடைய மூளையை அப்படியே பிரதி பிம்பமாக ஒரு கணினியில் ஏற்றி, அதை கணினியின் மூலமாகவே கட்டுப்படுத்த முடியும். அந்தக் கணினி நம்முடைய கைபேசி ஆக கூட இருக்கலாம். பார்க்கின்சன் நோய் வந்த நோயாளிகளுக்காக முதலில் இந்த சோதனை நடத்தப்பட இருக்கிறது. பின்பு சாதாரண மனிதர்களுக்கும் இதை சோதனை செய்ய, நிறுவனம் இந்த ஆண்டு தொடங்கும்.
இதன் மூலமாக எதிர்காலத்தில் ஒருவருக்கு ஒரு மொழியைக் கற்றுக் கொள்வதில் ஒரு நகரத்தைப் பற்றி தெரிந்து கொள்வதில்லை அல்லது ஒரு புதிய விஷயத்தை அறிந்து கொள்வதில் சிரமம் என்பதே இருக்காது. அதற்குத் தேவையான சிப்பை அல்லது தகவல்களை மட்டும் நம்முடைய மூளை கணினியில் பதிவேற்றம் செய்துவிட்டால் போதும்.
மேலும் முக்கியமான ஒன்றை நேற்று பேசிக்கொண்டிருந்தோம். ஒருவர் இறந்து விட்டால் என்ன செய்வது? நம்மிடம்தான் அவருடைய மூளையின் அனைத்து பதிவுகளும் தரவுகளும் இருக்கின்றனவே! அவருடைய மூளையை நாம் ஒரு கணினி ஆகவே மாற்றி வைத்திருக்கிறோம் அல்லவா? அந்தத் தரவுகளை நாம் ஒரு இயந்திரமனிதனுக்கு பதிவேற்றம் செய்து அதை நாம் இறந்து போன மனிதராக மாற்றிவிட முடியும். அவர் எப்படிப் பேசினாரோ அதேபோல அந்த இயந்திரமும் பேசும். அவருடைய பழக்க வழக்கங்கள் அனைத்தும் அதனிடம் இருக்கும். அவரைப் போலவே அதுவும் சிந்திக்கும். எனினும் அதை நாம் கட்டுப்படுத்த முடியும்.
எதிர்காலத்தில் ஒருவர் இறந்து விட்டால் நாம் அழுது கொண்டிருக்கத் தேவையில்லை.
ஒரு எந்திரனை வாங்கி ஏற்கனவே நாம் அவரிடம் பதிவு செய்து வைத்திருக்கும் அவரது மூளையை அதற்கு பதிவேற்றி விட்டால் போதும். நமக்குத் தேவைப்படும் வரை அதை வைத்துக் கொள்ளலாம்.
வசதி வாய்ப்புள்ளவர்களுக்கே இது சாத்தியம் என்றாலும், பின் ஒரு காலத்தில் இது மேலும் முன்னேறி ஜெனரிக் (பொதுப்படை) ஆகிவிடும்.
இரண்டு காணொளி இணைப்புகளை இணைத்துள்ளேன். பாருங்கள்.
https://www.cnet.com/google-amp/news/elon-musk-neuralink-works-monkeys-human-test-brain-computer-interface-in-2020/
Comments
Post a Comment