Posts

Showing posts from June, 2020

இந்தியாவின் தற்சார்பில் சீனா எங்கே வந்தது? பகுதி-1

Image
இந்தியாவின்  தற்சார்பில்  சீனா எங்கே வந்தது? - சு.முத்துக்குமார் 27.06.2020 இன்றைக்கு நாடு முழுக்க மிகப்பெரிய பரப்புரை கிளம்பியிருக்கிறது. அது என்னவெனில் சீன பொருட்களை, சீனத் தயாரிப்புகளை, சீன நாட்டின் செயலிகளை புறக்கணிக்க வேண்டும் என்பதாம். உண்மை என்ன? நம்மால் முற்றிலுமாக சீன பொருட்களை புறக்கணித்து விட முடியுமா? நாம் சீனப் பொருட்களை புறக்கணிப்பதால் சீனாவிற்கு ஏற்படும் பாதிப்பு எந்த அளவு இருக்கும்? நமக்கு ஏற்படும் பாதிப்பு எந்த அளவில் இருக்கும்? பொறுங்கள்! இதற்கெல்லாம் பதில்களை இப்போது பார்க்கலாம். இந்தியாவின் வளங்கள்: நாம் எல்லாருக்கும் தெரியும் இந்தியா உலகின் மக்கள் தொகையில் 18% கொண்டு உலக அளவில் மக்கள் தொகையில் இரண்டாம் இடம் வகிக்கிறது. எனினும் உலகின் நீர் வளத்தில் வெறும் 4% தான் நம்மிடம் இருக்கிறது. வனவளம், மீன்வளம், நிலக்கரி ஆகியவற்றை கணிசமான அளவில் இந்தியா பெற்றிருக்கிறது. எண்ணெய் இருப்பு அதிக அளவில் இல்லாவிட்டாலும் குறிப்பிடத்தக்க அளவு இந்தியாவில் இருக்கிறது.  இயற்கை எரிவாயு மற்றும் ஷேல் கேஸ் நிலக்கரி படுகை எரிவாயு ஆகியவையும் இந்தியாவில் காணக்கிடைக்கிறது. இவை போக,...

சீனத் தொலைத்தொடர்பு புரட்சி

Image
- இரா. கவுசிக், 18.06.'20 சீனா மட்டமான தரம் குறைந்த பொருட்களைத் தயாரிக்கிறது என நாம் எல்லாம் கேலி பேசிக் கொண்டிருந்தோம். நாம் மட்டுமல்ல, மேற்குலகும் அப்படித்தான் செய்து கொண்டிருந்தது. ஆனால் 2018லிருந்து இப்போது வரை சீனா என்னவெல்லாம் செய்திருக்கிறது என்ன செய்யப்போகிறது மேலும் என்பதைக் காண்போம்.  சீனப் பொருட்கள் தரம் குறைந்தவை என்ற நிலையிலிருந்து மாறி இன்று பல பிரபல நிறுவனங்களுக்கான பேர்பாதி மூலப்பொருட்கள்களைச் சீனாவே தருகிறது. ஏன் ஆப்பிள் நிறுவனமே சீன உதிரி பாகங்களை நம்பி இருக்கிறது. அங்கே உள்ள உற்பத்தியை குறைத்தாலும், வேறு நாடுகளில் அசெம்பிள் செய்ய சீன உதிரி பாகங்களே தேவையாய் இருக்கிறது.  கிட்டத்தட்ட கடந்த பத்து, இருபது ஆண்டுகளாக மிகத்தீவிரமாக சீனா புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. 1. ஹுவய் நிறுவனத்தின் கேமரா மற்றும் வன்பொருள்கள் ஒரு காலத்தில் கேமரா என்றால் சோனி நிறுவனம் தான் என்று இருந்ததற்கு இன்று சவால் விடுக்கிறது ஹூவய் நிறுவனத்தின் திறன்பேசி கேமரா மற்றும் அதன் திறன்.  கூகுளே இல்லாவிட்டாலும் விற்பனையில் ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனத்திற்கு...

Basic analysis b4 Self-Reliant India

Image
Basic Analysis Before Self- Reliant India by R.Koushik 18.06.2020 Dear fellow citizens, Things to be done before dreaming about self-reliance Before going into the story of self-reliance, there are certain aspects that must be first ensured it has been taken care of. The next step should be to plot a suitable plan for the future. A country can become a super power only when the basic necessities of all its people are met. Now sure there will be a certain number of poo r people who might not be able to afford certain things in their life but we should ensure that a majority of people are able to afford the most basic things in their day to day life according to 21st century standards. Analysing the conditions As the citizens of this nation we should understand that we are immensely diverse in everything. The same type of situation wouldn't be prevailing in all the parts of the nation. let us think for moment why are we like this , the way we are now. As a general citizen, don...

இறந்த பின்னும் வாழ முடியும்.

Image
நண்பர்களுக்கு வணக்கம்! என்னுடைய நண்பன் நல்ல கிரியேட்டிவ் மனம் கொண்டவன். இன்று ஒரு நல்ல கேள்வி கேட்டான். நீங்களும் உங்கள் பதிலைச் சொல்லலாம். எதிர்காலத்தில் நம்முடைய எண்ணங்களையும் நனவாக்க முடிந்தால் எப்படி?  அதாவது நாம் எப்படி சிந்திக்கிறோம் இருக்கிறோம் என்பது தானே நம் மனது. அதை AI மூலமாக படித்து ஒரு எந்திரனுக்கு அளித்து அதை நாம் ஆக்கிவிட்டால்?? நேற்று சில கேள்விகள் கேட்டிருந்தேன் இல்லையா? அதற்கு என்னுடைய நண்பன் வாயிலாக நான் தெரிந்து கொண்ட தகவல்களை உங்களுக்கு இங்கே தெரியப்படுத்துகிறேன். டெஸ்லா நிறுவனத்தின் எலான் மஸ்க் அவர்கள் அறிமுகப்படுத்தியுள்ள நியூராலின்க் என்ற புதிய கருவியின் மூலமாக நம்முடைய மூளையின் செயல்பாடுகளை பதிவு செய்து அதை வேறு ஒரு மனிதருக்கு பதிவேற்ற முடியும். அதே போல நம்முடைய மூளையை அப்படியே பிரதி பிம்பமாக ஒரு கணினியில் ஏற்றி, அதை கணினியின் மூலமாகவே கட்டுப்படுத்த முடியும். அந்தக் கணினி நம்முடைய கைபேசி ஆக கூட இருக்கலாம். பார்க்கின்சன் நோய் வந்த நோயாளிகளுக்காக முதலில் இந்த சோதனை நடத்தப்பட இருக்கிறது. பின்பு சாதாரண மனிதர்களுக்கும் இதை சோதனை செய்ய, நிறுவனம் இந்த ஆண்டு தொடங்க...

தேங்காய் பறிக்கும் குரங்குகள்

Image
குரங்குகள் தென்னை மரமேறி தேங்காய் பறித்துப் போடுகிறது! குரங்குகளுக்கான பள்ளி ஒன்று இயங்குகிறது!   நம்ப முடியவில்லையா?  ஒரு உயிரினம் திறமையாக இருக்குமெனில் அதை பல்வகைப் பயன்பாட்டுக்கும் பயன்படுத்திக் கொள்வதில் என்ன தவறு? மாடு வண்டி இழுக்கிறது, நிலம் உழுகிறது! குரங்கு தேங்காய் பறித்தால்?! கேட்க ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா நானும் முதலில் அப்படித்தான் இதைக் கேள்விப்பட்டேன்.  திரு. நக்கீரன் அவர்கள் எழுதிய காடோடி நூலை வாசித்துக் கொண்டிருந்த பொழுது, அதிலே பன்றி வால் குரங்குகளைப் பற்றியும் அவற்றை மலாயாவில் தென்னை மரமேறி தேங்காய் பறிக்க பயன்படுத்துவதைப் பற்றியும் எழுதியிருந்தார். வினோதமாக இருந்தது. இதைப்பற்றி மேலும் தேடிய பொழுது வித்தியாசமான செய்திகளும் கிடைத்தன.  தென்கிழக்கு ஆசிய நாடுகளான தாய்லாந்து, மலேசியா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் குரங்குகளை பல செயல்களுக்கு பயன்படுத்துகிறார்கள். அதில் ஒன்றுதான் தென்னை மரமேறி தேங்காய் பறிப்பது. கிட்டத்தட்ட 400 ஆண்டுகளுக்கும் மேலாக இப்படி குரங்குகள் தேங்காய் பறித்து போட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த தேங்காய் பறிப்புக்கு பெரும்பாலும் ...

​சென்னையில் கொரோனாவின் தீவிரம் குறித்து மருத்துவர். செல்வகுமார் அவர்களுடன் நடந்த கலந்துரையாடல்

Image
சென்னையை சேர்ந்த நண்பர் மருத்துவர். செல்வகுமார் அவர்களுடன் நடந்த கலந்துரையாடல்: சென்னையில் மட்டும் கொரோனா பாதிப்பு அதிகம் இருப்பது ஏன்? மற்ற நகரங்களில் மாவட்டங்களை ஒப்பிடுகையில் சென்னையில் குடிசைப் பகுதிகளில் அதிகம். அதனால் எளிதாக கொரோனா பரவிவிட்டது. மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் நாம் அதிக கொரோனா பரிசோதனைகள் செய்துள்ளோம். அதுவும் ஒரு காரணம். மேலும் முக்கியமாக மக்களின் ஒத்துழைப்பு இன்மையும் ஒரு காரணமாகும். வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றால் இங்கே விதிகளை மீறுவதும், பின்பற்றாமல் இருப்பதையும் பெருமையாக நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.  [ சென்னையின் கிட்டத்தட்ட 29 விழுக்காடு மக்கள் குடிசைப் பகுதியில் வசிப்பதாக புள்ளி விவரம் சொல்கிறது. டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழின் செய்தி இணைப்பில்] ¹. படம்: சென்னையில் மண்டல வாரியாக குடிசைப்பகுதிகள் படம்2: சென்னையில் மண்டல வாரியாக பாதிக்கப்பட்டோர்  அரசு எந்த அளவிற்கு செயல்பட்டிருக்கிறது? பொதுவில் மெத்தனமாக செயல்படுவதாக பேசப்படுகிறதே? அரசு மிகச்சிறப்பான செயல்பட்டதாகவும் சொல்ல இயலாது. அதேசமயம் அவ்வளவு மோசமாகும் செயல்படவில்லை. ஓரளவிற்கு அவர்கள் இந்த ...