Posts

பாவேந்தர் - மறைக்கடிக்கப்பட்ட உண்மையான புரட்சிக் கவிஞர்

Image
சில விஷயங்களை நாம் பேசியாக வேண்டும். இங்கேயே பல ஆயிரம் ஆண்டுகளாகவே ஒரு பிம்பம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அந்தப் பிம்பம் சிலருக்கானதாகவும், ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்தவர்களைத் தொடர்ந்து பெருமைப்படுத்தும் விதத்தில் இருந்து வருகிறது.  அப்படி இந்த பிம்பத்தால் மிகவும் அமுக்கப்பட்டு வெளியே தெரியாத போன, பொதுவெளியில் பேசப்படாது போன ஒருவர் தான் புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன். பாரதியாரைப் பற்றி ஒரு வரி கூட தெரியாத அவரது கவிதைகளை படித்திராத பலர் அவரது பிறந்த இறந்த நாளுக்கு பதிவுகள் போடுகின்றனர். அவரைப் பற்றி கேட்டால் அந்த பதிவு போடுபவர்களுக்கு ஒன்றுமே தெரிய மாட்டேன்கிறது! ஆனால் விடுதலை பெண்கள் கல்வி என்ற பேச்சை எடுத்தவுடனே பாரதி என்று ஆரம்பித்து விடுகிறார்கள். இது ஒரு நகை முரண். ஆங்கிலேயருக்கு பயந்து புதுச்சேரியில் சென்று ஒளிந்து கொண்டு பல ஆண்டுகளாக பாட்டையே எழுதாமல் திரைமறைவு வாழ்க்கை வாழ்ந்து ஊருக்கு யோக்கியம் சொல்லிக்கொண்டிருந்த பாரதிக்கு கிடைக்கின்ற புகழ் பாரதிதாசனுக்கு கிடைக்கவில்லை! சொல்லப்போனால் பாரதிதாசனுக்கு நிகராக கூட பாரதியை வைக்க முடியாது. பாரதிதாசன் எந்த புராண இதிகாச சா

பேராசிரியர் தொ.ப வுடன் ஒரு நேர்காணல்

Image
பேராசிரியர் தொ. பரமசிவன் (பிறப்பு: 1950) தமிழகத்தைச் சேர்ந்த ஒரு பண்பாட்டு ஆய்வாளர். பேராசிரியர் தொ. பரமசிவன் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டையில் வசித்து வருகிறார். தமிழில் இயங்கிவரும் முக்கியமான பண்பாட்டு ஆய்வாளர்களில் ஒருவர். பண்பாடு, சமயங்கள் தொடர்பான இவரது ஆய்வுகள் மார்க்சிய பெரியாரிய அடிப்படையைக் கொண்டது. அடித்தள மக்களின் அழிந்து வரும் பண்பாடுகளை காக்கவேண்டியதன் அவசியத்தைக் கூர்மையாக முன்வைப்பவர். திராவிடக்கருத்தியலோடு கூடிய புதிய ஆராய்ச்சி முறையியலைக் கண்டுபிடித்த பெருமைக்குரியவர். கலாச்சாரம் என்பது மறு உற்பத்தி சார்ந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் பேசுகின்ற தத்துவார்த்த மொழியை உடைத்தெறிந்துவிட்டு எளிமையான மொழியின் வழி நுண் அரசியலைப் புரியவைத்தவர். எச்சங்களாகவும், மிச்சங்களாகவும் சிதறிக் கிடக்கும் தமிழ்ப் பண்பாட்டின் வேர்களை தன் கட்டுரைகள் வாயிலாக எடுத்துரைத்து வருபவர். மேலிருந்து எழுதப்பட்ட வரலாற்றிற்கு மாற்றாக கீழிருந்து வரலாறு எழுதுவதற்கான பயிற்சியை இவரது கட்டுரைகள் தருகின்றன. தமிழ்ப் பண்பாட்டு ஆய்வுக்களத்தில், பேராசிரியர் தொ. பரமசிவன் தவிர்க்க முடியாத பெயர். வெகுமக்

புயல்கள் ஏன் எதிர் கடிகாரத் திசையில் சுழல்கின்றன ?

Image
    அண்மையில் நிவர் புயல் தமிழகத்தைப் பலமாக தாக்கி, இப்போது வலு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக ஆந்திர மாநிலத்தில் நிலைகொண்டுள்ளது. நிவர் புயல் தமிழகத்தை தாக்கியது உண்மைதான் என்றாலும் வட மாவட்டங்கள் மற்றும் ஒருசில டெல்டா மாவட்டங்களை தவிர மற்ற பகுதிகளில் சொட்டு மழை கூட பதிவாகவில்லை. இது ஏன்? ஆனால் எதிர்மறையாக ஆந்திரப்பிரதேசம் நல்ல மழை பொழிவை பெற்றிருக்கிறது.  புயலின் சுழற்சியை பொறுத்தே மழை பொழிவு அமையும். பொதுவாக வட அரைக்கோளத்தில் உருவாகும் புயல்கள் எதிர் கடிகார திசையிலும் தென் அரைக்கோளத்தில் உருவாகும் புயல்கள் கடிகார திசையிலும் சுழல்கின்றன. அப்படி வட அரைக்கோளத்தில் எதிர் கடிகார திசையில் புயல்கள் சுழல்வதால் தமிழகத்தை இப்படிப்பட்ட புயல்கள் தாக்கும் பொழுது செயற்கைக்கோள் படங்களின் மூலமாக அவற்றை நோக்கினால் தெளிவாக ஒன்று புலப்படும். வங்கக் கடலில் சென்னையில் இருந்து அல்லது புதுச்சேரியில் இருந்து 300 கிலோ மீட்டர் கிழக்கில் ஒரு புயல் இருப்பதாக கணக்கில் கொள்வோம். அந்தப் புயல் எதிர் கடிகார திசையில் சுற்றும் பொழுது வங்கக்கடலின் ஈரம் மிகுந்த காற்றை இழுத்து சென்னை உள்ளிட்ட வடக்கு தமிழக கடற்கரைக்கு

முத்தையா முரளிதரன் படம்: விஜய் சேதுபதி நடிக்க எதிர்ப்பு! இலங்கை தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள்?

Image
நான் பொதுவாக எந்த ஊரு செய்தி வந்தாலும் அந்தத் துறை சார்ந்த நண்பர்களிடம் அதைப் பற்றி விவாதிப்பது வழக்கம். இலங்கையைச் சேர்ந்த தமிழ் நண்பர் ஒருவர். தொடர்பு கொண்டு பேசினேன். முத்தையா முரளிதரன் வாழ்க்கை படமான '800' ஐ முன்வைத்து எழுந்திருக்கும் சர்ச்சைகளை இலங்கையில் எப்படி பார்க்கிறார்கள் என்பதை தெரிந்து கொண்டேன்.  அரசியல் விளம்பரம் இனவாதம் எல்லாவற்றையும் தாண்டி பொதுவாக முரளிதரன் விஷயத்தை பேச வேண்டியது கடமையாகிறது. முரளிதரன் இலங்கையின் மலையகத்தில் பிறந்த இந்திய வம்சாவளி தமிழர். சென்னை பெண்ணை திருமணம் முடித்தவர். இவர் மேல் மனக்கசப்பு எங்கே தொடங்குகிறது என்றால் ஒரு பேட்டியில் இலங்கை ஒரு பௌத்த நாடு தன்னை ஒரு இலங்கையன் என்றும் அடையாளப்படுத்துகிறார். எனினும் தனக்கு நன்றாக தமிழ் பேசத் தெரியும் என்றும் அதே பெட்டியில் தெரிவிக்கிறார். என்னதான் அரசியலமைப்பு ரீதியாக இலங்கை ஒரு பௌத்த நாடாக இருந்தாலும் இலங்கையில் தமிழ் சிங்களம் என இரு மொழி பேசும் நான்கு இனங்கள் இருக்கின்றனர். அப்படி இருக்கும்போது இவரே இலங்கையை ஒரு பௌத்த நாடு என அடையாளப்படுத்துவது மனக்கசப்பை உண்டாக்கியதாக தெரிவிக்கிறார

அறிவோம்: மனநல பிரச்சினைகள்

-காவ்யா பெரியசாமி மன நல நோய்களுக்கு இது தான் சிறந்த சிகிச்சை என்று பொதுவாக எதுவும் கூற முடியாது! ஒவ்வொரு நோயாளியின் நடத்தையை வைத்தே அதற்கு ஏற்ற வகையில் சிகிச்சை அளிப்பார்கள்! மனச்சோர்வு என்பது ஒரு மேலோட்டமான கூற்று. அதற்கு கீழ் பல விதமான மன நோய்கள் உள்ளன, like bipolar disorder, Parkinson's disease, schizophrenia, Border line personality disorder, anxiety disorder etc., சிலர் யாரிடமும் பேசாமல் அமைதியாகவே இருப்பார்கள், சிலர் தன்னிலை அறியாது எதேனும் பேசிக்கொண்டே இருப்பார்கள், சிலர் மிகவும் முரட்டுத்தனமாக நடந்துக் கொள்வார்கள், சிலர தன்னைச் சுற்றியுள்ள அனைவரையும் சந்தேகித்துக் கொண்டே இருப்பார்கள், அனைவரும் தங்களுக்கு தீங்கு விளைவிக்கப் போகிறார்கள் என்று வலுவாக நம்புவார்கள், அது அவர்களது குடும்பத்தினராக இருந்தாலும் சரி! அதில் சிலருக்கு தற்கொலை எண்ணங்களும் வந்து போகும்! இவ்வாறு இருக்க நாம் இது தான் தீர்வு என்று எதையும் கூற முடியாது! மாறாக இந்த எண்ணங்களின்/ நடத்தையின் வீரியத்தை குறைக்க முடியும்! நான் கூறியது போலவே இது நம் மூளையில் திரவ மாற்றம் காரணமாக ஏற்படும் ஓர் நோய்! அதற்கு நாம் சிறந

Voice of a Kashmiri

Image
- Khan Tauseef from Srinagar, Presently staying in TamilNadu Before 1947 jammu and kashmir was a princely state and had no connection with india and pakistan which both were under british rule and occupancy, till 1947 we had our own prime minister called sadri riyasat ,now comming on post independence of india and pakistan . On October 27, 1947, Maharaja Hari Singh, the then ruler of Jammu and Kashmir (J&K), signed the dubious instrument of accession with the Indian government allowing Indian forces to land in Srinagar in order to oust Pakistan-backed armed groups who were in a position to oust the Dogra rule from there. But the agreement was once the situation would be inder control indian forces had to leave kashmir but after that india army didn't leave and which results in to the first Indo-Pak war which resulted in the creation of the ceasefire line and occupation of a part of Jammu, Kashmir, and Ladakh by India. Only Gilgit, Baltistan and a small part of J&K came u

அம்பானிகளின் நாடு

நடுவண் அரசு அண்மையில் 3 விவசாய சட்டங்களை இயற்றி இருக்கிறது அல்லது திருத்தி இருக்கிறது. இதற்கு எதிராக நடுவண் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த சிரோமணி அகாலிதளம் கட்சியின் பெண் அமைச்சர் பதவி விலகி இருக்கிறார். பஞ்சாப் அரியானா மாநிலங்களில் பெரும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்திலும் முணுமுணுப்புகள் கேட்கின்றன. சரி எதற்காக நடுவணரசு இவ்வளவு அவசரமாக இந்த மூன்று சட்டங்களை கொண்டு வருகிறது என்கிற கேள்வி எழுகிறது? அண்மையில் நடந்த நிகழ்வுகளையும், இந்த சட்டத்தையும் நாம் பொருத்திப் பார்ப்பது காலத்தின் கட்டாயமாகிறது. நடுவண் அரசு ஏறக்குறைய அம்பானி மற்றும் அதானி போன்ற பெருநிறுவனங்களின் கைக்கூலியாகவே மாறிவிட்டிருக்கிறது என்று சொல்லத் தோன்றுகிறது. அவர்கள் கட்சிக்கு நிதி மட்டும் அளிக்கிறார்களா அல்லது அவர்களது கட்சியையே அல்லது அரசாங்கத்தை அவர்கள்தான் நடத்துகிறார்களா என்கிற கேள்விக்கு இன்றைய தேதியில் பதில் யாராலும் சொல்ல இயலும்.  கடந்த இரு வாரங்களுக்கு முன்பு அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் குழுமம் ஃபியூச்சர் ரீடைல் என்டர்பிரைசஸ் நிறுவனத்தை வாங்கி இருக்கிறது. இந்நிறுவனம் நாடுமுழுவதும், ஆயிரத்திற்கும்