முருகன் அசைவக் கடவுளா?
சில மாதங்களுக்கு முன்பு சுகிசிவம் அவர்கள் ஒரு காணொளி பதிவிட்டதினால் ஒரு சர்ச்சை கிளம்பியது. முருகனும் சுப்ரமணியனும் வேறு வேறா என்பது அதனுடைய தலைப்பு. நாம் அங்கே சுற்றி இங்கே என்று மீண்டும் அதே புள்ளியில் வந்து தான் இருக்கிறோம். தமிழர்கள் வழிபட்ட முருகனும் இன்றைய சுப்பிரமணியனும் வேறு வேறா? முருகர் அசைவ கடவுளா? எனக் கேட்டால் நான் சொல்லி விடுவேன் ஆம் என்று. ஆதாரம் கேட்பார்கள், எதிர்க் கேள்வி கேட்பவர்கள். அவர்களுக்காகவே இந்த பதிவு. பேராசிரியர் தொ. பரமசிவன் அவர்கள் சொல்வார்கள், பல தெய்வங்கள் பிறந்திருக்கின்றன, பல தெய்வங்கள் இறந்திருக்கின்றன. அதாவது ஒரு காலகட்டத்தில் ஒரு தெய்வ வழிபாடு மேலோங்கி நின்று பின்பு அறவே இல்லாது போகும். தமிழகத்தில் ஒரு காலத்தில் வழிபடப்பட்ட மூதேவி எனப்படும் மூத்த தேவி தற்காலத்தில் யாராலும் தொழப்படுவது இல்லை. அந்த தெய்வம் இறந்துவிட்டது. இன்று பல தெய்வங்கள் புதுப்பிறவி எடுத்துக் கொண்டு இருக்கின்றன. சான்றாக சாய்பாபாவைச் சொல்லலாம். புற்றீசல் போல பெருகிக் கொண்டே வருகிறார். நாம் முருகருக்கு வருவோம். சாய்பாபாவை அப்புறம் பார்ப்போம். தமிழின் மிகத் தொன்மையான நூலாக கருதப்படு...