Posts

தேங்காய் பறிக்கும் குரங்குகள்

Image
குரங்குகள் தென்னை மரமேறி தேங்காய் பறித்துப் போடுகிறது! குரங்குகளுக்கான பள்ளி ஒன்று இயங்குகிறது!   நம்ப முடியவில்லையா?  ஒரு உயிரினம் திறமையாக இருக்குமெனில் அதை பல்வகைப் பயன்பாட்டுக்கும் பயன்படுத்திக் கொள்வதில் என்ன தவறு? மாடு வண்டி இழுக்கிறது, நிலம் உழுகிறது! குரங்கு தேங்காய் பறித்தால்?! கேட்க ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா நானும் முதலில் அப்படித்தான் இதைக் கேள்விப்பட்டேன்.  திரு. நக்கீரன் அவர்கள் எழுதிய காடோடி நூலை வாசித்துக் கொண்டிருந்த பொழுது, அதிலே பன்றி வால் குரங்குகளைப் பற்றியும் அவற்றை மலாயாவில் தென்னை மரமேறி தேங்காய் பறிக்க பயன்படுத்துவதைப் பற்றியும் எழுதியிருந்தார். வினோதமாக இருந்தது. இதைப்பற்றி மேலும் தேடிய பொழுது வித்தியாசமான செய்திகளும் கிடைத்தன.  தென்கிழக்கு ஆசிய நாடுகளான தாய்லாந்து, மலேசியா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் குரங்குகளை பல செயல்களுக்கு பயன்படுத்துகிறார்கள். அதில் ஒன்றுதான் தென்னை மரமேறி தேங்காய் பறிப்பது. கிட்டத்தட்ட 400 ஆண்டுகளுக்கும் மேலாக இப்படி குரங்குகள் தேங்காய் பறித்து போட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த தேங்காய் பறிப்புக்கு பெரும்பாலும் பயன்படுத்தப்படுவது பன்றி

​சென்னையில் கொரோனாவின் தீவிரம் குறித்து மருத்துவர். செல்வகுமார் அவர்களுடன் நடந்த கலந்துரையாடல்

Image
சென்னையை சேர்ந்த நண்பர் மருத்துவர். செல்வகுமார் அவர்களுடன் நடந்த கலந்துரையாடல்: சென்னையில் மட்டும் கொரோனா பாதிப்பு அதிகம் இருப்பது ஏன்? மற்ற நகரங்களில் மாவட்டங்களை ஒப்பிடுகையில் சென்னையில் குடிசைப் பகுதிகளில் அதிகம். அதனால் எளிதாக கொரோனா பரவிவிட்டது. மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் நாம் அதிக கொரோனா பரிசோதனைகள் செய்துள்ளோம். அதுவும் ஒரு காரணம். மேலும் முக்கியமாக மக்களின் ஒத்துழைப்பு இன்மையும் ஒரு காரணமாகும். வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றால் இங்கே விதிகளை மீறுவதும், பின்பற்றாமல் இருப்பதையும் பெருமையாக நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.  [ சென்னையின் கிட்டத்தட்ட 29 விழுக்காடு மக்கள் குடிசைப் பகுதியில் வசிப்பதாக புள்ளி விவரம் சொல்கிறது. டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழின் செய்தி இணைப்பில்] ¹. படம்: சென்னையில் மண்டல வாரியாக குடிசைப்பகுதிகள் படம்2: சென்னையில் மண்டல வாரியாக பாதிக்கப்பட்டோர்  அரசு எந்த அளவிற்கு செயல்பட்டிருக்கிறது? பொதுவில் மெத்தனமாக செயல்படுவதாக பேசப்படுகிறதே? அரசு மிகச்சிறப்பான செயல்பட்டதாகவும் சொல்ல இயலாது. அதேசமயம் அவ்வளவு மோசமாகும் செயல்படவில்லை. ஓரளவிற்கு அவர்கள் இந்த விஷயத்தில