முத்தையா முரளிதரன் படம்: விஜய் சேதுபதி நடிக்க எதிர்ப்பு! இலங்கை தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள்?
நான் பொதுவாக எந்த ஊரு செய்தி வந்தாலும் அந்தத் துறை சார்ந்த நண்பர்களிடம் அதைப் பற்றி விவாதிப்பது வழக்கம். இலங்கையைச் சேர்ந்த தமிழ் நண்பர் ஒருவர். தொடர்பு கொண்டு பேசினேன். முத்தையா முரளிதரன் வாழ்க்கை படமான '800' ஐ முன்வைத்து எழுந்திருக்கும் சர்ச்சைகளை இலங்கையில் எப்படி பார்க்கிறார்கள் என்பதை தெரிந்து கொண்டேன். அரசியல் விளம்பரம் இனவாதம் எல்லாவற்றையும் தாண்டி பொதுவாக முரளிதரன் விஷயத்தை பேச வேண்டியது கடமையாகிறது. முரளிதரன் இலங்கையின் மலையகத்தில் பிறந்த இந்திய வம்சாவளி தமிழர். சென்னை பெண்ணை திருமணம் முடித்தவர். இவர் மேல் மனக்கசப்பு எங்கே தொடங்குகிறது என்றால் ஒரு பேட்டியில் இலங்கை ஒரு பௌத்த நாடு தன்னை ஒரு இலங்கையன் என்றும் அடையாளப்படுத்துகிறார். எனினும் தனக்கு நன்றாக தமிழ் பேசத் தெரியும் என்றும் அதே பெட்டியில் தெரிவிக்கிறார். என்னதான் அரசியலமைப்பு ரீதியாக இலங்கை ஒரு பௌத்த நாடாக இருந்தாலும் இலங்கையில் தமிழ் சிங்களம் என இரு மொழி பேசும் நான்கு இனங்கள் இருக்கின்றனர். அப்படி இருக்கும்போது இவரே இலங்கையை ஒரு பௌத்த நாடு என அடையாளப்படுத்துவது மனக்கசப்பை உண்டாக்கியதாக தெரிவிக்கிறார...