Posts

Showing posts from November, 2020

புயல்கள் ஏன் எதிர் கடிகாரத் திசையில் சுழல்கின்றன ?

Image
    அண்மையில் நிவர் புயல் தமிழகத்தைப் பலமாக தாக்கி, இப்போது வலு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக ஆந்திர மாநிலத்தில் நிலைகொண்டுள்ளது. நிவர் புயல் தமிழகத்தை தாக்கியது உண்மைதான் என்றாலும் வட மாவட்டங்கள் மற்றும் ஒருசில டெல்டா மாவட்டங்களை தவிர மற்ற பகுதிகளில் சொட்டு மழை கூட பதிவாகவில்லை. இது ஏன்? ஆனால் எதிர்மறையாக ஆந்திரப்பிரதேசம் நல்ல மழை பொழிவை பெற்றிருக்கிறது.  புயலின் சுழற்சியை பொறுத்தே மழை பொழிவு அமையும். பொதுவாக வட அரைக்கோளத்தில் உருவாகும் புயல்கள் எதிர் கடிகார திசையிலும் தென் அரைக்கோளத்தில் உருவாகும் புயல்கள் கடிகார திசையிலும் சுழல்கின்றன. அப்படி வட அரைக்கோளத்தில் எதிர் கடிகார திசையில் புயல்கள் சுழல்வதால் தமிழகத்தை இப்படிப்பட்ட புயல்கள் தாக்கும் பொழுது செயற்கைக்கோள் படங்களின் மூலமாக அவற்றை நோக்கினால் தெளிவாக ஒன்று புலப்படும். வங்கக் கடலில் சென்னையில் இருந்து அல்லது புதுச்சேரியில் இருந்து 300 கிலோ மீட்டர் கிழக்கில் ஒரு புயல் இருப்பதாக கணக்கில் கொள்வோம். அந்தப் புயல் எதிர் கடிகார திசையில் சுற்றும் பொழுது வங்கக்கடலின் ஈரம் மிகுந்த காற்றை இழுத்து சென்னை உள்ளிட்ட வடக்கு தமிழக கடற்கரைக்கு