Posts

புரட்டாசி மாதம் அசைவ விலக்கு உண்மை என்ன?

புரட்டாசி மாதம் அசைவ விலக்கு என பலரும் பதிவு போட்டு வருகின்றனர். உண்மை என்ன? தமிழகம் முழுவதும் இதே போல புரட்டாசி மாசம் யாருமே அசைவம் சாப்பிடுவது இல்லையா என்று பார்த்தோமானால் இது உண்மை அல்ல. இந்த பழக்கம் யாரிடம் இருக்கிறது என்றால் பெரும்பாலான வட - மேற்கு தமிழக மக்களிடமும், பெருமாளை வணங்கும் வைணவர்களிடம் தான் இருக்கிறது. தென் தமிழகத்தை எடுத்துக்கொண்டால் மதுரைக்கு தெற்கே புரட்டாசி மாதம் அசைவம் சாப்பிடுவது இல்லை என்பதெல்லாம் கட்டுக்கதை. அதுவும் கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்த பேச்சுக்கே இடமில்லை. தமிழகத்தைப் பொறுத்தவரை தெற்கே செல்லச் செல்ல தமிழினத்தின் கலப்பு இல்லாத உண்மையான பண்பாட்டு கூறுகள் வெளிப்படும். இந்த விஷயத்திலும் அதுதான். தமிழகத்தின் தென்கோடி பகுதிகளில் புரட்டாசி மாதத்தை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை கணக்கில்.  சரி புரட்டாசி மாதம் அசைவம் சாப்பிட்டால் உடல் நலத்திற்கு கேடாமே? உண்மையா? ஏன் புரட்டாசி மாதம் சாப்பிட கூடாத கூடாது என்றால் அதற்கு உடனே இந்த மாதம், வெயில் முடிந்து மழை தொடங்கக் கூடிய காலம். ஆகவே பூமியில் இருந்து வெப்பம் அதிக அளவில் வெளிப்படும். எனவே அசைவம் சாப்பிடுவது உடல் நலத

இந்தியை ஏன் பள்ளியில் ஒரு பாடமாக கற்கத் தேவையில்லை?

இந்தியை ஏன் பள்ளியில் ஒரு பாடமாக கற்கத் தேவையில்லை? நாம் பள்ளிக்கூடங்களில் இந்தியை ஒரு பாடமாக படித்து வருகிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதனால் ஏற்படும் நன்மைகள் என்ன? சங்கிகள் சொல்வது போலயே ஒருவேளை நீங்கள் வட இந்தியா வர நேரிட்டால் பள்ளிக்கூடத்தில் படித்த இந்தியை எவ்வளவு தூரம் பயன்படுத்துகிறீர்கள் என்று ஒரு மதிப்பீடு செய்தால் அதிகபட்சம் 10-20 சதவிகிதமே வரும்.  ஏனெனில் நீங்கள் இந்தியில் எழுத போவதோ வாசிக்கப் போவதோ இல்லை. மொழியின் நான்கு கூறுகளில் இரண்டு முதலிலேயே அவுட். அடுத்து வரக்கூடிய பேசுவது மற்றும் கேட்பது ஆகிய இரண்டும் தான் நீங்கள் பயன்படுத்த வேண்டி வரும். இன்றைய தேதியில் வட இந்தியாவிலும், கிராம பகுதிகளை தவிர நகரங்களில் ஆங்கில கலப்பு இந்தியையே பயன்படுத்துகிறார்கள்.  சான்றாக பேருந்து எத்தனை மணிக்கு வரும்? என்பதை Bus ka timing kya hai? என்றால் பதில் சொல்லிவிடுவார்கள். கூட்டி கழித்து பார்த்தால் ஒரு ஐநூறு ஆயிரம் வார்த்தைகள் தெரிந்திருந்தால் போதும் நீங்கள் இந்தியில் பேசி வட இந்தியா முழுவதும் சுற்றி வந்துவிடலாம். தமிழகத்திலிருந்து தொழில் நிமித்தமாக வேலை நிமித்தமாக செல்லக் கூடியவர்கள்

கடலடி ஒளி இழைத்தடங்கள்: சில உண்மைகள்

Image
கடலடி ஒளி இழைத்தடங்கள்: சில உண்மைகள் - சு.முத்துக்குமார் 07.09.2020      சென்னைக்கும் அந்தமானுக்கும் இடையில் சில வாரங்களுக்கு முன்பு கடலடி கேபிள் வசதி தொடங்கப்பட்டுள்ளதாக செய்தி வந்தது. நாம் எல்லோரும் படித்திருப்போம். சரி உலகமெங்கும் எப்படி இதைச் செய்கிறார்கள் இதன் பயன் என்ன? கடலடி என்றால் எவ்வளவு ஆழத்தில் எப்படி பதிக்கிறார்கள் என்பதை யோசித்திருக்கோமா? இல்லை என்றால் கவலை இல்லை. இப்போது யோசிக்கலாம். வாருங்கள்.     ஒருகாலத்தில் கடலடியில் தகவல்களை பரிமாற்ற உலோக கம்பி வடங்கள் பயன்படுத்தப்பட்டிருந்தாலும் இன்றைய தேதியில் முழுவதும் கண்ணாடி ஒளி இழைகள் பயன்படுத்தப்படுகின்றன. முதலில் இதைப் பார்ப்போம். கண்ணாடி ஒளி இழைகள்:       பள்ளிக்கூடத்தில் படித்திருப்போம், கண்ணாடி ஒளி இழைகள் தகவல்களை ஒரு முனையிலிருந்து மறுமுனைக்கு ஒளி அலைகளின் மூலமாக எடுத்துச் செல்வதற்கு உதவுகின்றன. கண்ணாடி ஒளி இழைகள், ஒளி அலைகளை தகவல் பரிமாற்றத்திற்கு பயன்படுத்துகின்ற காரணத்தினால் தான் இதனது பயன்பாடு அளப்பரியதாக இருக்கிறது. இந்த பேரண்டத்திலேயே வேகம் கூடியது எதுவென நமக்குத் தெரியும், ஒளியைத் தவிர வேறு ஒன்றும் இல்

ஐரோப்பிய வாகையர் ஆட்ட இறுதிப் போட்டி - சாதனைகள் பல கண்டு‌ பட்டம் பெற்ற பேர்ன் முனிச்!

Image
லிஸ்பன் நகரில் நேற்று நடந்த 2019-20 ஐரோப்பிய வாகையர் ஆட்ட (சாம்பியன்ஸ் லீக்) இறுதி போட்டியில் ஜெர்மனியின் பேர்ன் முனிச் அணி, பிரான்சின் பாரிஸ் செயின்ட் ஜெர்மெய்ன் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி கொண்டது. ஆட்ட சுவாரசியங்கள்: பேர்ன் முனிச் அணிக்கான கோலை கிங்ஸ்லே கோமன் அடித்து, அந்த அணிக்கு வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியை ஏழு ஆண்டுகளுக்குப் பின் பெற்றுத் தந்திருக்கிறார். பேர்ன் முனிச் அணி ஆறாவது முறையாக வாகையர் பட்டம் சூடுகிறது. 2013க்கு பின் ஏழு ஆண்டுகள் காத்திருந்து இந்த சாதனையைப் படைத்திருக்கிறது. பேர்ன் முனிச் அணி தான்‌ இன்று பெற்ற ஆறாவது பட்டத்துடன் வாகையர் ஆட்ட வரலாற்றில் அதிக முறை பட்டம் பெற்ற மூன்றாவது அணியாக உருவெடுத்துள்ளது. [முதல் - ரியல் மாட்ரிட் (13முறை), இரண்டு - மிலன் (7முறை)] பேர்ன் முனிச் அணி தான் பெற்ற ஒரு கோல் மூலமாக மற்றொரு சாதனையை நிகழ்த்தி இருக்கிறது. ஐரோப்பிய வாகையர் ஆட்ட வரலாற்றில் 500 கோல்கள் அடித்த மூன்றாவது அணியாக இடம்பெற்று விட்டது. பேர்ன் முனிச் அணிக்கு வெற்றி தேடித் தந்த கிங்ஸ்லே கோமன் எதிரணியின் சொந்த களமான பாரிசைச் சேர்ந்தவர் மற்றும் பிஎஸ்ஜி இளையோர் ப

கே.பி.என் தெரியும் நமக்கெல்லாம் வி.பி.என். தெரியுமா?

Image
கொரோனா ஊரடங்கு காலத்திற்குப் பின் விபிஎன் என்பது மிகவும் புகழ் பெற்றுவிட்டது. சரி விபிஎன் என்றால் என்ன? விபிஎன் (மெய்நிகர் தனி வலையமைப்பு) என்பது பொது மற்றும் தனிநபர் நெட்வொர்க் க்கு பாதுகாப்பு மற்றும் ரகசிய காப்பு அளிக்கும் ஒரு இணைப்பு முறையாகும். சான்றாகச் சொல்லவேண்டுமானால் wi-fi ஹாட்ஸ் பாட்டுகள் தனக்கே உரிய விபிஎன் என்னும் இணைப்பை பயன்படுத்தி தகவல்களை பத்திரப்படுத்தி கொள்ளும். அதாவது தங்களிடம் கடவுச்சொல் கேட்ட பின்பு தானே இணைப்பு தரும், அதுதான் அந்த ரகசிய நெட்வொர்க். அண்மைக் காலங்களில் விபிஎன் மிகவும் பிரபலமடைந்து வருகிறது. காரணம் பலரும் வீட்டிலிருந்தே வேலை செய்கிறார்கள், மேலும் அரசுக்கு தெரியாமல் அரசால் தடை செய்யப்பட்ட இணையதளங்களை பார்க்க முயற்சிக்கிறார்கள். எப்படி விபிஎன் நமக்கு ரகசிய காப்பு அளிக்கிறது என்றால் நம்முடைய வலைப்பின்னலின் ஐபி முகவரி பதிலாக வேறு ஒரு ஐபி முகவரி மூலமாக இணைய இணைப்பை அளிக்கிறது. விபிஎன் சந்தாதாரர்கள் தங்கள் விருப்பப்படும் ஐபி முகவரியை நிறுவனம் அளித்திருக்கும் பட்டியலிலிருந்து தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். எடுத்துக்காட்டாக, நீங்கள் சென்னையிலிருந்து இணையதளத்தில

Does TamilNadu really need a Second Capital?

Image
No need for a second capital in Tamil Nadu! Why? Tamil Nadu is one of the leading states in India.  The capital of Tamil Nadu - Chennai, like almost all other states, is located in a corner.  Is that why we need a second capital?  If so, I would say no.  Having dealt with the past without transportation and telecommunications, we need to think about why today.  Corona is changing our lives even more and taking us all the way into the digital world.  Today the demand for a second capital is meaningless.  How many times you had to go to the capital?  Once, twice?  That's it.  If we say for the court, there is already a bench of the High Court in Madurai!  What is the problem then?  If you show your hand to Andhra Pradesh, the situation is different there.  The capital is going to be the third.  They are going to set up a capital for the judiciary, a capital for the administration, a capital where the legislature will be.  You can't do that here!  Secondly, there is no point in bu

தமிழகத்திற்கு ஏன் இரண்டாம் தலைநகரம் தேவையில்லை?

Image
தமிழகத்தில் இரண்டாம் தலைநகரம் ஏன் தேவையில்லை? தமிழகம் - இந்தியாவின் முன்னணி மாநிலங்களுள் ஒன்று. தமிழகத்தின் தலைநகரும் ஏறக்குறைய மற்ற அனைத்து மாநிலங்களைப் போல ஒரு மூலையிலேயே அமைந்துவிட்டது. அதனாலேயே நமக்கு இரண்டாம் தலைநகரம் வேண்டுமா? என்றால் இல்லை என்பேன் நான். போக்குவரத்து வசதி இல்லாத, தொலைத்தொடர்பு வசதி இல்லாத கடந்த காலத்தையே சமாளித்து வந்திருக்கும் நாம் இன்று ஏன்‌ அதைப்பற்றி யோசிக்க வேண்டும். கொரோனா நம்முடைய வாழ்க்கையை இன்னும் மாற்றி முழுவதும் மின்னணு உலகிற்குள் அழைத்துச் சென்று கொண்டிருக்கிறது. இன்று இரண்டாம் தலைநகரம் என்கிற கோரிக்கை பொருளற்றது. நீங்கள் எத்தனை தலைநகருக்கு செல்ல வேண்டியது இருந்திருக்கிறது? ஒரு முறை, இரு‌ முறை? அவ்வளவு தான். நீதிமன்றத்திற்காக சொன்னோமானால் ஏற்கனவே மதுரையில் உயர்நீதிமன்ற கிளை இருக்கிறதே! அப்புறம் என்ன பிரச்சினை? ஆந்திராவை நீங்கள் கை காட்டினால் அஙகே நிலைமை வேறு. தலைநகரே மூன்றாக அமையப் போகிறது. நீதித்துறைக்கு ஒரு தலைநகர், நிர்வாகத்திற்கு ஒரு தலைநகர், சட்டமன்றம் இருக்கப்போகும் ஒரு தலைநகர் என அமைக்க இருக்கிறார்கள். அப்படி இங்கே முடியாதே! இரண்டாவதாக மதுரையில